பாபர் மசூதி வழக்கில் அலஹாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய அநியாய தீர்ப்பை கண்டித்தும் , கருப்புகோட்டில் கருங்காலிகளாக இருந்து நாட்டின் நீதித்துறையை கேவலப்படுத்தும் அலஹாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகளை கண்டிக்கும் விதமாகாகவும் இதை விட முக்கியமாக உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை தானாக எடுத்து மறு விசாரணைக்கு உட்படுத்தி சட்டப்படி(சட்ட புத்தகத்தில் உள்ளபடி) நீதி வழங்கவும் சென்னை மற்றும் மதுரையில் ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடைபெறும் என தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் அறிவித்தது. இந்த அறிவிப்பை கேட்டதும் கொந்தளிப்பை தங்களது மனதுக்கும் பூட்டி வைத்திருந்த மக்கள் அனைவரும் கூட்டம் கூட்டமாக தமிழகத்தின் அனைத்து பகுதியிலிருந்தும் ஆண்கள் , பெண்கள் , முதியவர்கள் மற்றும் குழந்தைகளும் வீரத்தளபதிகளாக சென்னை மற்றும் மதுரை நோக்கி அணி திரண்டனர். கட்டுக்கடங்காத மக்கள் கொந்தளிப்பால் சென்னை மற்றும் மதுரை நகரமே ஸ்தம்பித்தது. சென்னையில் சென்ட்ரல் மெமோரியல் ஹால் இல் இருந்து உயர்நீதிமன்றம் வரை பேரணி புறப்படும் என அறிவிப்பு செய்யப்படிருந்தது. ஆனால் அல்லாஹ்வின் பேரளுளால் மக்கள் வெள்ளமே சென்னையின் முக்கிய சாலைகளை முடக்கி பேரணி நடக்க முடியாத அளவுக்கு மாற்றியது.
தொடர்ந்து சென்னையில் P . ஜைனுல் ஆபிதீன் அவர்களும் மதுரையில் அல்தாபி அவர்களும் அலஹாபாத் உயர்நீதிமன்றம் மற்றும் அநியாய தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளை கண்டித்து கண்டன உரை நிகழ்த்தினர். மேலும் இந்த வழக்கை தானாக எடுத்து நியாய தீர்ப்பு வழங்குமாறும் உச்ச நீதிமன்றத்திற்கு கோரிக்கை வைத்தனர்.
பத்ரு போர்க்களத்தை சந்தித்த சமுதாயத்தை ஏமாற்ற நினைத்தால் எங்கள் பள்ளிகளை காப்பாற்ற எத்தகைய போர்க்களங்களையும் சந்திக்க தயங்க மாட்டோம் என்பதை இந்த அரசுக்கு உணர்த்தியது.
ஆக்கம்,
k . ஹசன் பஷீர்
-சமுதாய பணி தொடர இறைவினிடம் ப்ரார்த்திப்பிராக !
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
1 கருத்துகள்:
மாஷா அல்லாஹ், எல்லா புகழும் இறைவனுக்கே!!
கருத்துரையிடுக
உங்கள் விமர்சனகள், இறைவனுக்கு உண்மையாய் இருக்கு வேண்டுகிறோம்