Related Posts Plugin for WordPress, Blogger...

Tamil Nadu Thowheed Jamaath - Seven Wells Branch Headline Animator

அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைத்து தானும் நல்ல அமல் செய்து தான் ஒரு முஸ்லிம் என்று கூறுபவனை விட அழகிய சொல்லுக்குரியவன் யார் ?

சண்டை மூட்ட வந்த சமாதானப் பிரபு : இயேசுவின் மற்றொரு முகம்

Posted on
  • திங்கள், 10 ஜனவரி, 2011
  • by
  • Unknown
  • in
  • லேபிள்கள்:
  • கும்பகோணத்தில் கடந்த வாரம் 14-12-10 செவ்வாய் அன்று பாதிரியார்கள் மத்தியில் உலக அமைதிக்கு இஸ்லாம் கூறும் தீர்வு என்ன? என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அல்தாஃபி அவர்களின் உரையைத் தொடர்ந்து, குழுமியிருந்த பாதிரியார்கள் இஸ்லாம் குறித்த தங்களது குற்றச்சாட்டுக்களையும் ஆட்சேபணைகளையும் கேள்விக்கணைகளாக தொடுத்தனர். போட்டி போட்டுக் கொண்டு ஒவ்வொரு பாதிரியாக கேள்விக்கணைகளை தொடுக்க நிகழ்ச்சி பரபரப்பானது.

    முகலாயர்கள் ஆக்கிரமிக்கவில்லையா? அது தீவிரவாதமில்லையா?

    ? கிறிஸ்தவர்கள் பிறரது வளத்தை சுரண்ட வந்தது தவறு என்றால், முஸ்லிம் முகலாய மன்னர்கள் இந்தியாவை ஆக்கிரமித்தது சரியா? இது தீவிரவாதமாகாதா? என்று முதல் கேள்வியை ஒரு பாதிரியார் கேட்டார்.

    ! “முகலாயர்கள் செய்ததையும், ஆங்கிலேயர்கள் செய்ததையும் ஒன்றாக ஒப்பிடக் கூடாது. ஏனென்றால், ஆங்கிலேயர்கள் ஒவ்வொரு நாட்டின் வளத்தையும் சுரண்டி தங்களது நாட்டுக்கு கொண்டு சென்றனர். ஆனால், முகலாயர்கள் எதையும் தங்களது நாட்டுக்கு கொண்டு செல்லவில்லை. மாறாக மக்களிடத்திலிருந்து எடுத்து மக்களுக்கே கொடுத்தனர். அத்தோடு மட்டுமில்லாமல், தாங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளோம் என்று கூட இங்கிருந்த மக்கள் உணராத அளவுக்கு வெகு சிறப்பான ஆட்சியைத்தான் முகலாயர்கள் செய்தனர்.

    அதே நேரத்தில் ஆங்கிலேயர்கள் 200 வருடங்களில் இந்திய மக்களால் துரத்தியடிக்கப்பட்டனர். ஆனால் முகலாய மன்னர்களோ 800 வருடங்களுக்கு மேல் இந்தியாவை ஆண்டனர். அவர்களால் இந்த நாட்டிற்கு பல்வேறு நன்மைகள் விளைந்துள்ளன. இந்திய மக்கள் அவர்களை விரட்டியடிக்கவில்லை, மாறாக ஆங்கிலேயர்கள் தான் அவர்களது ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைத்தனர்.

    மேலும், எந்த அளவுக்கு முஸ்லிம் அரசர்களின் ஆட்சியை இந்த நாட்டு மக்கள் விரும்பினார்கள் என்றால், அதற்கு ஒரு வரலாற்று சம்பவத்தை உதாரணமாக கூறலாம். வரலாற்று ஆசிரியர் பாலகிருஷ்ணன் என்பவர் “டனாய்க்கன் கோட்டை“ என்ற தனது வரலாற்று நூலில், திப்புசுல்தான் ஆங்கிலேயருக்கு எதிராக போரிட்டபோது, ஆங்கிலேயருக்கு எதிரான போரில் திப்புசுல்தான் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இந்துக்கள் தங்களது கோயில்களில் சிறப்பு யாகங்கள் நடத்தினார்கள் என்ற வரலாற்றுச் செய்தியை குறிப்பிட்டு காட்டு கின்றார்.

    இந்த அளவுக்கு முஸ்லிம் மன்னர்களது ஆட்சியை வேண்டி இந்துக்கள் யாகம் நடத்திய வரலாற்றோடு, ஏகாதிபத்திய ஆங்கிலேய ஆட்சியை ஒப்பிட முடியாது என்பதை இதற்கு பதிலாகத் தருகின்றோம்…” என்று அல்தாஃபி பதிலளித்தார்.

    முஸ்லிம்கள் சாந்தசொரூபிகளாக இருக்காமல் தீவிரவாதிகளாக இருப்பது ஏன்?

    முஸ்லிம்கள்தான் பெருவாரியான தீவிரவாத செயல்களில் ஈடுபடுகின்றனர். அதனால்தான் அவர்களை தீவிரவாதிகள் என்று உலகம் பேசுகின்றது. அதே நேரத்தில், கிறிஸ்தவமக்கள், “ஒரு கன்னத்தில் அடித்தால், மறு கன்னத்தை காட்டு” என்ற ஏசு நாதரின் அறிவுரைப்படி சாந்தசொரூபிகளாக இருப்பதனால் நாங்கள் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதில்லை. நீங்கள் ஏன் சாந்த சொரூபிகளாக இருப்பதில்லை என்று அடுத்த கேள்வியை பாதிரியார் முன்வைத் தார்.

    ! ஒரு கன்னத்தில் அடித்தால், மறு கன்னத்தை காட்டு என்ற வாதம் அறிவுக்கு பொருத்தமற்ற வாதமாகும். இந்த வாதம் சரியானது என்றால் அதை கிறிஸ்தவர்கள் முதலில் கடை பிடிக்க வேண்டும். அதை கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கின்றார்களா? என்று நாம் ஆய்வு செய்தால் எந்த கிறிஸ்தவரும் இந்த சித்தாந்தத்தை கடைபிடிப்பதில்லை. வெறும் வாய் வார்த்தையாகத்தான் இதைக் கூறுகின்றார்களே தவிர இதை உண்மையில் யாரும் தங்களது வாழ்க்கையில் நடைமுறைப்படுத்துவதில்லை. அதற்கு பல உதாரணங்களை கூறலாம்.

    “ஒரு கன்னத்தில் அடித்தால், மறு கன்னத்தை காட்டு” என்ற சித்தாந்ததை கூறக் கூடிய கிறிஸ்தவ நாடுகள் அனைத்திலும் குற்றவாளிகளை தண்டிக்கக்கூடிய கிரிமினல் சட்டங்களை வகுத்து வைத்திருப்பதேன்? அனைத்து கிறிஸ்தவ நாடுகளிலும் கிரிமினல் சட்டங்களை நீக்கிவிட்டு குற்றவாளிகளை தப்ப விட்டுவிடலாமா?

    மேலும், இந்த சட்டத்தை எவரேனும் அமுல்படுத்துவாரேயானல், அந்த நாடுகளில் ரவுடியிசம் அதிகமாகி தீவிரவாதம் பெருகுமே தவிர அது அமைதிக்கு வழி வகுக்காது.

    மேலும், இந்த வாதம் சற்றும் அறிவுக்கு பொருத்தமான வாதமாகாது. யாரேனும் ஒருவர் உங்களது ஒருபாக்கெட்டிலிருந்து 50 ரூபாயை திருடுவாரேயானால், அவரைப் பிடித்து தண்டிப்பதை விட்டுவிட்டு, உங்களது மற்றொரு பாக்கெட்டிலிருந்து இன்னொரு ஐம்பது ரூபாயை எடுத்து நீட்டுவீர்களா? இது எப்படி சரியாகும்? என்ற அறி வுப்பூர்வமான கேள்வியும் முன்வைக்கப் பட்டது.

    மேலும், இந்த தமிழ்நாட்டிலேயே விழுப்புரத்தில் கிறிஸ்தவ மடாலயம் ஒன்று சங்பரிவாரக் கும்பலால் தாக்கப்பட்டபோது அதற்காக அதைக் கண்டித்து கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியது ஏன்? காவல் துறைக்கு சென்று அந்த சமூக விரோதிகளுக்கு எதிராக கிறிஸ்தவ சமுதாயம் காவல்நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தது ஏன்?

    கன்னியாஸ்திரிகள் கற்பழிக்கப்பட்ட போதும், பாதிரியார்கள் படுகொலை செய்யப்பட்ட போதும் கிறிஸ்தவ சமுதாயம் அந்த சமூகவிரோத செயல்களுக்கு எதிராக கொதித்தெழுந்து போராட்டங்களில் ஈடுபட்டது ஏன்?

    இதுபோன்ற நடவடிக்கைகள் அனைத்தையும் செய்துவிட்டு ஒரு கன்னத்தில் அடித்தவனுடைய மறு கன்னத்தில் பல இடங்களில் அடித்துவிட்டு, சில இடங்களில் மறு கன்னத்தில் அடிப்பதற்கு அனைத்து முயற்சிகளையும் எடுத்துவிட்டு உங்களை சாந்தசொரூபிகளைப்போல காட்ட முயற்சிப் பது எந்த விதத்திலும் சரியாகாது. உள்ளே ஒன்று செய்வதும், வெளியே ஒன்று பேசுவதுமாகத்தான் இந்த விஷயத்தில் கிறிஸ்தவ சமுதாயத்தின் நிலை இருக்கின்றது என்பதும் சுட்டிக் காட்டப்பட்டது.

    அது மட்டுமில்லாமல், முஸ்லிம்கள் மீது சம்பந்தமில்லாமல் தீவிரவாதிகள் என்ற பழி போடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தீவிரவாத செயல்களை செய்யும் கிறிஸ்தவர்கள் சாந்த சொரூபிகளாக காட்டப்படுகின்றார்கள். இதுதான் எதார்த்த நிலை என்பதை அல்தாஃபி விளக்கினார்.

    குறிப்பு:
    ஒரு கன்னத்தில் அடித்தால், மறு கன்னத்தை காட்டு என்ற சித்தாந்தத்தை இயேசு கூறியதாக கூறும் கிறிஸ்தவர்கள் பைபிளில் கூறப்பட்டுள்ள இயே சுவின் மற்றுமொரு முகத்தை எவருக்கும் தெரியாமல் மறைத்து இருட்டடிப்பு செய்து விட்டனர் என்பதை இந்த இடத்தில் நாம் சுட்டிக் காட்ட ஆசைப்படுகின்றோம்.

    சமாதானப் பிரபு என்று இயேசுவை அழைக்கும் கிறிஸ்தவ உலகம் அவர் தன்னைப் பற்றி என்ன சொன்னார் என்பதை முழுமையாக உலகிற்கு வெளிப்படுத்தினால் அவருடைய உண்மை முகம், இன்னொரு முகம் வெளிப்படும். ஆம்! இயேசு தன்னைப் பற்றி பைபிளில் கூறுவதை கேளுங்கள்.

    சண்டை மூட்ட வந்த சமாதானப் பிரபு

    இங்கே கிறிஸ்தவர்களோ, இயேசுவை சமாதானத் தூதர், சமாதானப் பிரபு என்று சொல்லிக் கொண்டிருக்கும் நிலையில் இயேசுவோ, நான் சண்டை மூட்டத்தான் வந்தேன்; என்னை சமாதானத்தை உண்டு பண்ண வந்தவன் என்று சொல்லாதீர்கள்” என்று பிரகடனம் செய்கின்றார். இதோ ஏசுவின் பிரகடனம் பைபிளிலிருந்து,

    நான் பூமியிலே சமாதானத்தை உண்டாக்க வந்தேன் என்று நினைக்கிறீர்களோ? சமாதானத்தை அல்ல. பிரிவினையையே உண்டாக்க வந்தேன் என்று உங்களுக்குச் சொல்கிறேன்.
    எப்படியெனில், இது முதல் ஒரே வீட்டில் ஐந்து பேர் பிரிந்திருப்பார்கள், இரண்டு பேருக்கு விரோதமாய் மூன்று பேரும் மூன்று பேருக்கு விரோதமாய் இரண்டு பேரும் பிரிந்திருப்பார்கள்.
    தகப்பன் மகனுக்கும், மகன் தகப்பனுக் கும், தாய் மகளுக்கும், மகள் தாய்க்கும், மாமி மருமகளுக்கும், மருமகள் மாமிக்கும் விரோ தமாய்ப் பிரிந்திருப்பார்கள் என்றார்.
    (லூக்கா 12 : 49, 51, 52, 53)

    பூமியின்மேல் சமாதானத்தை அனுப்ப வந்தேன் என்று எண்ணாதிருங்கள். சமாதானத்தையல்ல, பட்டயத்தையே அனுப்ப வந்தேன்.
    எப்படியெனில், மகனுக்கும் தகப்பனுக்கும் மகளுக்கும் தாய்க்கும் மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன்.
    (மத்தேயு 10 : 34, 35)

    இயேசுவின் மற்றொரு முகம்:

    ஏசுவை கவலை தோய்ந்த முகத்தோடு பரிதாபப்படக் கூடிய தோற்றத்தில், அப்பாவி யைப்போல முகத்தையுடையவராகவும், சாந்த சொரூபியைப் போலவும்தான் நம்மில் ஒவ் வொருவரும் வரைபடத்தில் பார்த்து இருக்கின்றோம்.

    ஆனால், ஏசுநாதரை மிகப்பெரிய ஒரு வாளை தனது கையில் ஏந்திக் கொண்டு, போர் புரியச் செல்லும் போர் படைத் தளபதியாக போர் வீரராக, மனதில் கற்பனை செய்து பார்த்தால் எப்படி இருக்கும்?

    இயேசுவை அப்படி எப்படி நாங்கள் கற்பனை செய்து பார்க்க முடியும்? என்று கிறிஸ்தவர்கள் கேட்கலாம். ஆனால், பைபிள் அவரைப் பற்றி கூறுவதைக் கேளுங்கள்.

    மேலும் அவர், “நான் அரசனாக இருப்பதை விரும்பாத என் பகைவர்களை இங்கு கொண்டு வந்து என் முன்படுகொலை செய்யுங்கள்” என்று சொன்னார்.
    லூக்கா 19:27

    என்னை அரசனாக ஏற்றுக் கொள்ளாதவர்களை என் முன் கொண்டுவந்து படுகொலை செய்யுங்கள் என்று சொன்னவர்தான் சாந்த சொரூபியா? சமாதானப் பிரபுவா?

    மேலும், யூதர்களுக்கு எதிராக போர் புரிவதற்காக ஆடைகளை விற்றாவது வாள் வாங்குங்கள் என்று தனது சாந்தசொரூப (?) சீடர்களுக்கு கட்டளைட்ட சம்பவத்தையும் பைபிள் விவரிக்கின்றது.

    இதோ, பைபிளின் வாசகங்கள்:

    இயேசு சீடர்களிடம், “நான் உங்களைப் பணப்பையோ வேறு பையோ மிதியடியோ எதுவுமில்லாமல் அனுப்பியபோது, உங்களுக்கு ஏதாவது குறை இருந்ததா?” என்று கேட்டார். அவர்கள், “ஒரு குறையும் இருந்த தில்லை” என்றார்கள். அவர் அவர்களிடம், “ஆனால், இப்பொழுது பணப்பை உடையவர் அதை எடுத்துக் கொள்ளட்டும்; வேறு பை உடையவரும் அவ்வாறே செய்யட்டும். வாள் இல்லாதவர் தம் மேலுடையை விற்று வாள் வாங்கிக் கொள்ளட்டும்”
    லூக்கா 22:35, 36

    இவ்வாறு யூதர்களுக்கு எதிராக வாளேந்தி போர்புரிவதற்கு போர்பிரகடனம் செய்த ஏசுநாதரை, சண்டை மூட்ட வந்தவன் தான் நான், நான் தகப்பனுக்கும் பிள்ளை களுக்கும் மத்தியிலும், இதுபோன்ற ஒன்றாக இருக்கக்கூடிய மக்கள் மத்தியில் சண்டை மூட்ட வந்தவன்தான் என்று சொன்ன ஏசு நாதரை சாந்த சொரூபியாக காட்ட முயல்வது மாபெரும் வரலாற்று மோசடி என்பதையும் கூடுதலாக இங்கு பதிவு செய்கின்றோம்.

    Source : TNTJ News Portal

    0 கருத்துகள்:

    கருத்துரையிடுக

    உங்கள் விமர்சனகள், இறைவனுக்கு உண்மையாய் இருக்கு வேண்டுகிறோம்

    Related Posts Plugin for WordPress, Blogger...
     
    Copyright (c) 2011 Designed byDezMatix
    Other Links : TNTJ NEWS PORTAL, Online PJ,