Related Posts Plugin for WordPress, Blogger...

Tamil Nadu Thowheed Jamaath - Seven Wells Branch Headline Animator

அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைத்து தானும் நல்ல அமல் செய்து தான் ஒரு முஸ்லிம் என்று கூறுபவனை விட அழகிய சொல்லுக்குரியவன் யார் ?

கொட்டாவி (Yawning) வர உண்மையான காரணம் என்ன!!!? | அதிசயக்கும் அண்டார்டிக்கா – அறிய புகைப்படங்கள்

Read More...

ஸ்லம் பகுதியில் வசிக்கும் முஸ்லிம் குடும்பங்களிடம் தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம்   ஏழுகிணறு கிளையில் 
கடந்த 25-9-2011 அன்று சென்ட்ல் அருகில் உள்ள ஸ்லம் பகுதியில்
வசிக்கும் முஸ்லிம் குடும்பங்களிடம்
இணைவைப்பு பெரும்பாவம்
என்ற  பிரச்சாரம் நடைபெற்ற
து

Read More...

ஏழுகிணறு கிளையில் ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம்  ஏழுகிணறுகிளையில் கடந்த26-09-2011 அன்று ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டது. இதில் ஒருவரின் கையில் இருந்து தாயத்து அவருக்கு விளக்கப்பட்டு கழற்றி எறியப்பட்டது. அல்ஹம்துலி்ல்லாஹ்!.
Read More...

மருந்தாகும் உணவு வகைகள்…சில டிப்ஸ்…| How to learn? எளிமையாக படிக்கும் முறை!! | கூகுல் தேடல் (Google Search) – இணையதளத்தில் ஒரு அற்புத வழிகாட்டி – பகுதி 2

Read More...

சுறுசுறுப்பாக வேலை செய்ய ஒரு சில வழிகள்! || Civil Service போட்டி தேர்வில் எந்த பாடங்களை விருப்பப் பாடமாக தேர்வு செய்யலாம்?

-- 

கல்வி களஞ்சியம் (www.kalvikalanjiam.com)
கல்விப்பணியில் என்றும் உங்களுடன்....

Read More...

மோடி உண்ணாவிரதம் ஒரு அரசியல் ஸ்டண்ட்: tntj

மோடி உண்ணாவிரதம் ஒரு அரசியல் ஸ்டண்ட்:
மோடியின் விரதம் பொய்யானது என்பதை மக்கள் அறிய   வடசென்னை மாவட்டம் சார்பாக( 15-09-11 ) அன்று   கண்டன  போஸ்டர்  ஒட்டப்பட்டது.இதனை வலியுறுத்தும் பஸ்வான்
புதுடெல்லி, சனி, 17 செப்டம்பர் 2011( 13:13 IST )
குஜ்ராத் முதலமைச்சர் நரேந்திர மோடியின் உண்ணாவிரதம் ஒரு அரசியல் ஸ்டண்ட் என்று லோக் ஜன்சக்தி கட்சித் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் குற்றம் சாட்டியுள்ளார்.

அமைதி, சமூக நல்லிணக்கம் கோரி 3 நாட்களுக்கு உண்ணாவிரம் இருக்கப்போவதாக அறிவித்திருந்த மோடி, குஜராத் பல்கலை வளாகத்தில் இன்று காலை தமது உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.

இந்நிலையில் மோடியின் உண்ணாவிரதத்திற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

மோடியின் உண்ணாவிரதத்திற்கு பா.ஜனதா தலைவர்கள் தவிர்த்து, தமிழக முதலமைச்சரும்,அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், மோடியின் உண்ணாவிரதம் ஒரு அரசியல் ஸ்டண்ட் என்று லோக் ஜன்சக்தி கட்சித் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் குற்றம் விமர்சித்துள்ளார்.

நரேந்திர மோடியின் உண்ணாவிரதம் ஒரு அரசியல் நாடகமாக உள்ளது. இதன் மூலம் தன்னை ஒரு மதச்சார்பற்ற தலைவராக காட்டிக்கொள்ள முயற்சிக்கிறார்.உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து மோடி பிரதமர் பதவியை இலக்காக கொண்டு அவர் அரசியல் நாடகமாடுகிறார் என பஸ்வான் மேலும் கூறியுள்ளார்.
Read More...

பெண்கள் டாய்லெட்டில் கேமரா...சர்ச்சையில் அரசு உளவு நிறுவனம்!

பெண்கள் டாய்லெட்டில் கேமரா...சர்ச்சையில் அரசு உளவு நிறுவனம்!
புதுடெல்லி, புதன், 21 செப்டம்பர் 2011( 14:54 IST )
மத்திய அரசின் தொழில் நுட்ப உளவு நிறுவனமான என்டிஆர்ஓ-வில் பெண்கள் கழிப்பறையில் உளவு கேமரா வைத்து படம் பிடிக்கப்பட்ட செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனமான என்டிஆர்ஓ (National Technical Research Organisation -NTRO),கார்கில் ஊடுருவலுக்கு பின்னர் உருவாக்கப்பட்ட அமைப்பாகும்.

மத்திய அரசு நிறுவனமான இதன் தலைமை அலுவலகம் டெல்லியில் உள்ளது. இதில் நூற்றுக்கணக்கான ஆண் மற்றும் பெண் ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.

இந்நிலையில் பெண் ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களும் உபயோகிக்கும் கழிப்பறையில் "ஸ்பைகேம்" எனப்படும் சிறிய ரக கண்காணிப்பு கேமரா ரகசியமாக பொருத்தப்பட்டு, அது இந்த உளவு நிறுவனத்தின் மற்றொரு உளவு ஏஜென்சியின் அதிகாரி ஒருவரது கேமராவுடன் இணைக்கப்பட்டிருந்திருக்கிறது.

அந்த கம்ப்யூட்டரில் இருந்தபடி அந்த கேமராவில் பதிவாகும் காட்சிகளை அந்த அதிகாரி கண்காணித்து வந்துள்ளார்.

நீண்ட நாட்கள் இவ்வாறு நடைபெற்றுவந்த நிலையில், ஒருநாள் கழிப்பறைக்கு சென்ற பெண் ஊழியர் ஒருவருக்கு,ஏதோ சந்தேகம் ஏற்பட, அந்த அறையில் உற்று நோக்கியுள்ளார். அப்போதுதான் அங்கு ஸ்பைகேமரா வைக்கப்பட்டுள்ளதை பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து அவர் மற்ற பெண் ஊழியர்களுக்கும் தெரியப்படுத்த, அதனைத் தொடர்ந்து உயரதிகாரியிடம் இது குறித்து புகார் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து இது குறித்து பெண் அதிகாரி ஒருவர் தலைமையில் உள்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, நடந்த சம்பவம் உண்மைதான் என்று அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாக தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் என்டிஆர்ஓ பிரதமர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்த போதிலும், இந்த விவகாரம் குறித்து அங்கு தெரிவிக்கப்படவில்லை.

இந்த சம்பவம் கடந்த 2007-08 ஆம் ஆண்டுகளில் நடைபெற்றபோதிலும், தற்போதுதான் இது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Read More...

கவனத்தோடு படிக்க என்ன செய்யணும்? || கேள்வி பதில் – தனி தேர்வராக (Private Candidate) 12ம் வகுப்புத்தேர்வில் தேர்ச்சி பெற்றால் TNPSC தேர்வுகளை எழுதலாமா?




--

கல்வி களஞ்சியம் (www.kalvikalanjiam.com)
கல்விப்பணியில் என்றும் உங்களுடன்....

Read More...
Related Posts Plugin for WordPress, Blogger...
 
Copyright (c) 2011 Designed byDezMatix
Other Links : TNTJ NEWS PORTAL, Online PJ,