Related Posts Plugin for WordPress, Blogger...

Tamil Nadu Thowheed Jamaath - Seven Wells Branch Headline Animator

அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைத்து தானும் நல்ல அமல் செய்து தான் ஒரு முஸ்லிம் என்று கூறுபவனை விட அழகிய சொல்லுக்குரியவன் யார் ?

வினாடி வினா

Posted on
  • புதன், 26 ஜனவரி, 2011
  • by
  • TNTJ
  • in
  • லேபிள்கள்:
  • வினா :
    நபிகள் நாயகம் மரணிக்கும் போது ஒருவரிடம் சில ரகசியங்களை கூறினார்கள்.அது யார்? என்ன ரகசியம்?
    பதில்:
    ஃபாத்திமா (ரலி)1.என் வாழ்நாள் முடிவடையும் நேரம் வந்துவிட்ட(தைக் குறிப்ப)தாகவே அதை கருதுகிறேன். என் வீட்டாரில் என்னை முதலில் வந்தடையப் போவது நீ தான்'' என்று கூறினார்கள்.2.இறைநம்பிக்கையான சொர்க்கவாசி பெண்களின் தலைவியாக இருக்க நீ விரும்பவில்லையா?ஆதாரம்:
    புகாரி 3624 முஸ்லிம் 4486 திர்மிதி 3807 இப்னு மாஜா 1610 அஹ்மத் 2334324.09.2009. 05:472  வினா ;
    மூன்று தன்மை இருந்தால் நாம் இறைநம்பிக்கையின் முழுச்சுவையை சுவைத்துவிட்டோம்! அது என்ன?
    பதில்:
    1.அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அவருக்கு, மற்ற அனைத்தையும் விட அதிகம் நேசத்திற்குரியவர்களாகுவது.2.அவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது.3.நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போல் இறை நிராகரிப்புக்குத் திரும்பிச் செல்வதை வெறுப்பது.
    ஆதாரம்:புகாரி -16 முஸ்லிம் -60 திர்மிதீ -2548 நஸாயி -4901 இப்னு மாஜா -4023 -
    வினா
     :ஆதம் (அலை) அவர்களது உயரம் எவ்வளவு?
    பதில்
    :60 முழம் (60 அடி)ஆதாரம்:புகாரி 3326 முஸ்லிம் -5075



    கேள்வி:
    அல்லாவிற்கு மிகவும் பிடித்த வார்த்தைகள் சொல்வதற்கு இலகுவான சிறிய வார்த்தைகள் அதிகம் நன்மையை பெற்றுத் தரும் வார்த்தைகள் அவை எத்தனை? என்ன?

    பதில்
    :இரண்டு வார்த்தைகள்1. சுப்ஹானல்லாஹில் அலீம்.2. சுப்ஹானல்லாஹி வ பிஹம்திஹி.ஆதாரம்:புகாரி-6406 முஸ்லிம்-4860 திர்மிதீ-3389 இப்னு மாஜா-3796 அஹ்மத்-6870
    கேள்வி:
    நபிகள் நாயகத்தின் பெயர் திருக்குர்ஆனில் எத்தனை இடங்களில் இடம் பெற்றுள்ளது?
    பதில்:
    ஐந்து இடங்கள்ஆதாரம்:முஹம்மது என்பது 4 இடங்களில்: 3-144 33-40 47-2 48-29.அஹ்மத் என்பது 1 இடத்தில்: 61-6.
    கேள்வி:
    அபுபக்கர் அவர்களது ஆட்சிகாலத்தில் முதன் முதலில் திருக்குர்ஆனை தொகுத்த இளைஞர் யார்?

    பதில்:
    சைத் இப்னு சாபித் (ரலி)

    ஆதாரம்:
    புகாரி-7191 திர்மிதி-3028 அஹ்மத்-20657

     கேள்வி:
    இப்ராஹீம் (அலை) அவர்கள் தோற்றத்தில் யாரைப் போன்று இருப்பார்கள்?
    பதில்:
    முஹம்மது (ஸல்) அவர்கள்.ஆதாரம்:புகாரி-3355 முஸ்லிம்-244 திர்மிதீ-௩௫௮௨

    கேள்வி
    :நபிகள் நாயகத்தின் உம்மத்தில் விசாரணையின்றி சுவர்க்கம் செல்பவர்கள் எத்தனை பேர்? அவர்கள் எப்படிப்பட்டவர்கள்?

    பதில்:
    70 ஆயிரம் பேர்கள். 1.அவர்கள் ஓதிப்பார்க்கமாட்டார்கள். 2.அவர்கள் சகுனம் பார்க்கமாட்டார்கள். 3.அவர்கள் (நோய்க்காக) சுடிட்டுக் கொள்ளமாட்டார்கள்.4.அவர்கள் தனது இறைவனையே சார்ந்திருப்பார்கள்.

    ஆதாரம்:புகாரி-5705 முஸ்லிம்-323 திர்மிதீ-2370 அஹ்மத்-2321  
     கேள்வி
     :கிப்லா மாற்றத்திற்கு பிறகு நபிகள் நாயகம் தொழுத முதல் தொழுகை என்ன?
    பதில்:
    அசர் தொழுகை.ஆதாரம்:புகாரி-41 முஸ்லிம்-818 திர்மிதீ-312 நஸாயி-485 இப்னுமாஜா-1000 அஹ்மத்-17765

    கேள்வி:
    நபிகள் நாயகம் இரண்டு சஹாபிக்கு பட்டாடை அணிவதற்கு அனுமதி கொடுத்துள்ளார்கள். யாருக்கு? ஏன்?
    பதில்;
    1.அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி). 2.சுபைர் (ரலி)சிரங்கு நோயின் காரணமாக.

    ஆதாரம்:நூல் புகாரி-2919 முஸ்லிம்-3869
    கேள்வி:
    மக்காவில் இருந்து மதினாவிற்கு முதன் முதலில் நபிகள் நாயகம் வரும் போது மக்கள் யாரை தவறுதலாக இவர் தான் அல்லாஹ்வின் தூதர் என்று நினைத்தனர்?
    பதில்
    :அபுபக்கர் (ரலி). ஆதாரம்:புகாரி-3906 அபுதாவுத்-3561 அஹ்மத்-16930



    0 கருத்துகள்:

    கருத்துரையிடுக

    உங்கள் விமர்சனகள், இறைவனுக்கு உண்மையாய் இருக்கு வேண்டுகிறோம்

    Related Posts Plugin for WordPress, Blogger...
     
    Copyright (c) 2011 Designed byDezMatix
    Other Links : TNTJ NEWS PORTAL, Online PJ,