Related Posts Plugin for WordPress, Blogger...

Tamil Nadu Thowheed Jamaath - Seven Wells Branch Headline Animator

அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைத்து தானும் நல்ல அமல் செய்து தான் ஒரு முஸ்லிம் என்று கூறுபவனை விட அழகிய சொல்லுக்குரியவன் யார் ?

கும்பகோணத்தில் 40 பாதிரியார்களுடன் நடந்த விவாதம்.

Posted on
  • வெள்ளி, 7 ஜனவரி, 2011
  • by
  • Ansari
  • in
  • கும்பகோணத்தில் 40 பாதிரியார்களுடன் நடந்த விவாதம்.

    கடந்த 14-12-2010 செவ்வாய்க் கிழமை அன்று தஞ்சை வடக்கு மாவட்டம் கும்பகோணத்தில் கிறிஸ்தவ பாதிரியார்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் குடந்தை மறைவட்டத் தில் உள்ள சுமார் நாற்பது பாதிரியார் கள் கலந்து கொண்டு இஸ்லாம் சம்மந்தப்பட்ட கேள்விகள் கேட்டனர், இதற்கு மாநிலத் தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாஃபிகேள்விகளுக்கு பதில் அளித்தார்

    பாதிரியார்கள் பங்கேற்ற கேள்வி - பதில்நிகழ்ச்சி

    தஞ்சை வடக்கு மாவட்டம் கும்பகோணத் தில் இருந்த நமது மாவட்ட நிர்வாகிகளை கடந்த 13-12-2010 அன்று சந்தித்த ஒருகிறிஸ் தவ சகோதரர் 14.12.10செவ்வாய்க்கிழமை அன்று காலை 11 மணியளவில் குடந்தை மறைவட்ட பாதிரியார்கள்ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி நடைபெற இருப்பதாகவும், இந்த நிகழ்ச்சி குறித்த ஆலோசனை நடைபெற்ற போது, இந்நிகழ்ச்சியில் இஸ்லாமிய சமூ கத்தை சேர்ந்த அறிஞர்ஒருவரை அழைத்து உலக அமைதிக்கு இஸ்லாம் கூறும் தீர்வு என்ன? என்பதனை அறிய ஒரு உரை நிகழ்த்த சொல்ல வேண்டும் என்றுமுடிவெடுக்கப்பட்டதாகவும் அதில் தங்களது அமை ப்பை சேர்ந்தவர்கள் கலந்துகொள்கிறீர்களா? என்றகேள்வியை எழுப்பியுள்ளார்

    அதைத்தொடர்ந்து, ஃபாதர் மார்ட்டின் அவர்கள் நமது மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து, குடந்தை மறைவட்ட பாதிரியார்கள்ஒருங்கிணைப்பு நிகழ்ச்சியில் தஞ்சை சுற்று வட்டார பகுதியில் சர்ச்சுகளில் பொறுப்பாள ராகவுள்ள 40க்கும் மேற்பட்ட பாதிரிமார்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும், அதில் தங்களது அமைப்பு சார்பாக உங்களது மார்க்க அறிஞர் வந்து "உலகஅமைதிக்கு இஸ்லாம் கூறும் தீர்வு என்ன?' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தவேண்டும் என்ற வேண்டுகோளை நேரில் வைத்தார்.

    அதற்கு பதிலளித்த நமது தஞ்சை வடக்கு மாவட்ட நிர்வாகிகள், நாங்கள் வெறு மனே உரை நிகழ்த்திவிட்டு மட்டும் செல்லமாட்டோம். இஸ்லாத்திற் கும் கிறிஸ்துவ மார்க்கத் திற்கும் மத்தியில் எண் ணற்றகருத்து வேறுபாடு கள் உள்ளன; எனவே அவற்றை கேள்விகளாக நாங்கள் எழுப்புவோம். அதற்குபாதிரிகளாக இருக்கக்கூடிய நீங்கள் பதிலளிக்கவேண்டும்

    அதைப்போன்று உங்க ளுக்கு இஸ்லாம்மார்க்கம் குறித்து இருக் கக்கூடிய எத்தகைய குற்றசாட்டுகளையும் கேள்விகளாக நீங்கள்எழுப்பலாம். அதற்கு நாங்கள் பதிலளிப்போம்; இந்த நிலைப்பாட்டிற்கு தாங்கள்தயாரா? என்று கேள்வியெ ழுப்ப,தாங்கள் தாராளமாக கேள்விகளை எழுப்பலாம்; நாங்களும் கேள்விகளை கேட்கின்றோம், நீங்களும் பதிலளியுங்கள் என்றுகூறிவிட்டு சென்றுள்ளார்.

    அதைத்தொடர்ந்து, மாநிலநிர்வாகத்தை தொடர்புகொண்ட தஞ்சை வடக்கு மாவட்ட நிர்வாகிகளிடம் இந்த நிகழ்ச்சியில்மாநிலத் தலைவர் சகோதரர் பக்கீர் முஹம்மது அல் தாஃபி கலந்து கொள்வார்கள் என்றுதெரிவிக்கப்பட்டது.

    மறுக்கப்பட்ட பொன்னாடை வரவேற்பு:

    மாநிலத் தலைவரோடு, தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் இம்தியாஸ், செயலாளர் ராசிக், மற்றும் சுவாமிமலை ஜாஃபர் ஆகி யோர் நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றனர்.கும்பகோணம் காமராஜர் சாலையில் அமைந் துள்ள தூய மரியன்னை பேராலய வளாகத் தில் 14-12-2010 செவ்வாய்க்கிழமை அன்று காலை 11மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பமானது.நிகழ்ச்சியில் தஞ்சை சுற்றுவட்டார பகுதியில் சர்ச்சுகளில் பொறுப்பாளராகவுள்ள 40க்கும் மேற்பட்ட பாதிரிமார்கள் குழுமியிருந்தனர்.

    இந்த நிகழ்ச்சிக்கு பொறுப்பாளராகவுள்ளஃபாதர் பீட்டர் பிரான்சிஸ் அவர்கள் முதலில் நமது அழைப்பை ஏற்றுவந்துள்ள பக்கீர்முஹம்மது அல்தாஃபி அவர்களுக்கு பொன் னாடை போர்த்தப்படும் என்று அறிவிப்புசெய்தார். அவர் அறிவிப்பு செய்தவுடனேயே இது எங்களது மார்க்க நெறிமுறைகளுக்குஎதிரானது, எனவே இத்தகைய பொன்னாடை களை நாங்கள் ஏற்பதில்லை என்று கூறியவு டன் அந்தஅறிவிப்பை வாபஸ் பெற்றுக் கொண்டனர்.

    உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தஉரை:

    அதைத்தொடர்ந்து, மாநிலத்தலைவர் சகோதரர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர் கள், உலக அமைதிக்கு இஸ்லாம் கூறும் தீர்வு என்ன? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

    உரைக்கு முன்னால், கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் பல்வேறு விஷயங்களில் ஒன்றுபட்டு இருப்பதைபட்டியலிட்டார்.

    1. நியாயந்தீர்க்கப்படும் நாளை நம்புதல்

    2. இறந்த பிறகு பரலோக ராஜ்ஜியம் உண்டு என்பதை நம்புதல்

    3. தீர்க்கதரிசிகளுக்கு இறைவனிடத்திலி ருந்து வேதம் வருகின்றது என்பதை நம்புதல்

    4. ஏசு தந்தையின்றி பிறந்தார் என்பதை நம்புதல்

    5. குழந்தை ஏசு பேசினார் என்பதை நம்புதல்

    இதுபோன்ற நம்பிக்கையில் நாம் ஒன்று பட்டுஇருந்தாலும், ஏசுவை நீங்கள் இறை வனுடைய மகன் என்று சொல்கின்றீர்கள், அவரை வணங்குகின்றீர்கள், கடவுள் மூன்று என்று கூறுகின்றீர்கள்இதுபோன்ற பல விஷயங்களில் முரண்பாடுகளும் இருக்கின்றன.

    எனவே நமக்குள் இருக்கும் முரண்பாடு களைகளையும் விதமாக கிறிஸ்தவ பாதிரி மார்கள் மற்றும் இஸ்லாமிய அறிஞர்கள் ஒன் றாகஅமர்ந்து நமக்கு மத்தியில் இருக்கும் கருத்து வேறுபாடுகளை களையும் விதமாக ஒரு முழுஅளவிலான கலந்துரையாடல் நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், அப்போதுதான் உங்களுக்கும், எங்க ளுக்கும் மத்தியில் இருக்கும்கருத்து வேறு பாடுகள் நீங்கி கருத்தொற்றுமை ஏற்படும்.

    எனவே இதுபோன்றதொரு கலந்துரை யாடல்காலத்தின் கட்டாயம் என்பதையும் அந்த கலந்துரையாடலுக்கு நாங்கள் தயாராகஇருப்பதாகவும் தனது கருத்தையும் வேண்டு கோலையும் முன்வைத்துவிட்டு தனது உரையைஆரம்பித்தார்.

    உலக அமைதிக்கு இஸ்லாம் கூறும் தீர்வுஎன்ன?

    அல்தாஃபி அவர்கள் தனது உரையில் உலகில்அமைதி நிலவ வேண்டும் என்றால் தீவிரவாத செயல்கள் குறைய வேண்டும். நாடு பிடிக்கவேண்டும், அடுத்தவர்களுடைய பொருளாதாரத்தை சுரண்ட வேண்டும், அடுத்த நாடுகளுடையவளத்தை அபகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சில கிறிஸ்தவ நாடுகள் தங்களதுதீவிரவாதத்தை கட்ட விழ்த்து விடுகின்றன.

    இந்த தீவிரவாத செயல்கள் ஒழிக்கப்பட் டாலேஉலக நாடுகளில் நடைபெற்று வரும் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட தீவிரவாதசெயல்கள் அழித்தொழிக்கப்பட்டு உலகத்தில் அமைதி நிலவும். இதை இறைத்தூதர் நபிகள்நாயகம் (ஸல்) அவர்கள் தங்களது இறுதிப் பேருரையில், அடுத்தவருடைய மானம், மரி யாதை, பொருள் மற்றவருக்கு ஹராம் (அதா வது தடுக்கப்பட்டது) என்று கூறிச் சென்றுள் ளார்கள்.

    ஒருவருடைய மானம், மரியாதை, பொருள், உடைமைகள் அனைத்தும் புனித மானவை. அந்த புனிதம் பேணப்பட வேண் டும் என்றும், இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

    எனவே, இந்த நிலைப்பாட்டை ஒவ் வொருநாடுகளும் மேற்கொண்டாலே, இந்த அறிவுரையை ஒவ்வொரு நாடுகளும் கடை பிடித்தாலே உலகத்தில் அமைதி நிலவும்என்று அழுத்தமாக இஸ்லாத்தின் நிலைப் பாட்டை பதிய வைத்தார்.

    பாவம் ஒரு பக்கம், பழி ஒரு பக்கம்:

    நிலைமை இவ்வாறிருக்க கிறிஸ்தவ நாடு களோதாங்கள் செய்யும் தீவிரவாத செயல் களை மறைத்துவிட்டு, தாங்கள் எந்த நாடுகளின் மீது ஆக்கிரமிப்பு நடத்துகின்றார்களோ, எந்த நாட்டின் வளத்தைசுரண்டுவதற்காக அவர்கள் மீது போர் தொடுக்கின்றார்களோ அந்த அப்பாவி நாட்டுமக்கள்இவர்களை எதிர்த்து ஆயுதம் தாங்கினால் தாங்கள் செய்த தீவிரவாத செயலை மறைக்கமுஸ்லிம்களின் மீது அந்த பழியைப் போட்டுவிட்டு தங் களை சாந்த சொரூபிகளைப் போன்றுஉலக மக்க ளுக்கு காட்டிக் கொள்கின்றனர்.

    தங்களது தீவிரவாத முகத்தை மறைப்ப தற்காகதங்களை சாந்த சொரூபிகளைப்போல வேடமிட்டு இரண்டு வேடம் போட்டு முஸ்லிம்களின் மீதுபழிபோடும் செயலை கிறிஸ்தவ உலகம் தான் செய்து வருகின்றது என்ற குற்றச்சாட்டைபகிரங்கமாக வைத்தார்.

    மேலும், உலக நாடுகள் மீதுஅநியாயமாக போர் தொடுக்கும் கிறிஸ்தவ நாடுகளில் யாரும் தீவிரவாதிகள் என்றுகூறுவதில்லை. அதே நேரத்தில் நாடுபிடிக்க வந்த கொள்ள யர்களை நாட்டைவிட்டு விரட்டும்புனித வேலையை செய்பவர்களை தீவிரவாதிகள் என்று மீடியாக்களும் குற்றம் சுமத்தி அபாண்டத்தை வீசுகின்றன என்றும்,அதே நேரத்தில் இத் தகைய நிலையை முஸ்லிம்கள் விஷயத் தில்மட்டும்தான் இத்தகையோர் எடுக்கின்ற னர் என்றும், அதே நேரத்தில் மாவோயிஸ்ட்டுகள், நக்சலைட்டுகள், விடுதலைப்புலி யினர்,போன்றோர் போராட்டக்களத்தில் குதிக் கும்போது அவர்களாகதங்களது மதத்தோடு இணைத்து இந்து தீவிரவாதிகள் என்றோ, அல்லது கிறிஸ்தவநாடுகள் இத்தகைய ஆக் கிரமிப்பை செய்யும்போது கிறிஸ்தவ தீவிரவா திகள் என்றோகூறுவதில்லை என் பதையும் வேதனையோடு தனது உரையில் சுட்டிக் காட்டினார்.

    அதே நேரத்தில் எதிர்த்து போரிடுபவர்களைமட்டும்தான் தீவிரவாதிகள் என்று கூறும் பழக் கம் இருப்பதாக வைத்துக் கொண் டாலும், வியட்நாம், கௌதமாலா போன்ற கிறிஸ்தவ நாடுகளை அமெரிக்கா ஆக்கிரமிக்கும்போதா வது அவர்களை எதிர்த்துபோரிட்ட வியட்நாம், மற்றும் கௌதமாலாவை சேர்ந்த கிறிஸ்தவர்களை கிறிஸ்தவ தீவிரவாதி கள் என்று யாரும்கூறவில்லை என்பதையும் தனது உரையில் பதிய வைத்தார்.

    மேலும், நமது இந்திய நாட்டையும்ஆக்கி ரமிக்க வந்த கிறிஸ்தவர்களை யாரும், கிறிஸ் தவ தீவிரவாதிகள் என்று கூறவில்லை.அவர் களை எதிர்த்து போரிட்ட இந்துக்கள், மற்றும் முஸ்லிம்களை இந்துதீவிரவாதி என்றோ முஸ்லிம் தீவிரவாதி என்றோ கூறவில்லை என்பதையும் தனது உரையில்சுட்டிக் காட்டி னார்.

    ஆக மொத்தத்தில், உலகத்தில் நடக்கும் பெருவாரியான தீவிரவாத செயல்களுக்கு கிறிஸ்தவ நாடுகளேகாரணம் என்றும், அவர்கள் தங்களது தீவிரவாத செயல்களை நிறுத்திக் கொண்டால் உலகில் நடைபெறும்தீவிரவாதத்தில் பெருவாரியானவை குறைந்து விடும் என்பதையும் அழுத்தம் திருத்தமாகபதிய வைத்தார்.

    அனல்பறந்த கேள்வி - பதில் நிகழ்ச்சி:

    கூடியிருந்த கூட்டமோ கிறிஸ்தவத்தை தங்களதுவாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டு, அதை பிரச்சாரம் செய்யும் பாதிரியார்களின் கூட்டம். அங்கு இறைவனது மாபெ ரும் அருளைக் கொண்டு உண்மைக் கருத்து களைபோட்டு உடைத்தால் பாதிரியார்கள் சும்மா இருப்பார்களா என்ன? குழுமியிருந்த பாதிரியார்கள் ஒவ்வொருவரிடத்திலிருந்தும் கேள்விக்கணைகள் நம்மைநோக்கி பாய்ந்தன.

    அவர்களது அத்தனை கேள்விகளுக்கும்அறிவிப்பூர்வமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் அல்தாஃபி அவர்கள் பதிலளித்தார். இஸ்லாம் மார்க்கம் குறித்தபாதிரிமார்களின் கேள்விகள் அனைத்திற்கும் பதிலளிக்க கேள்வி-பதில் நிகழ்ச்சி அனல்பறந்தது. அவர்கள் கேட்ட கேள்விகளையும் அதற்கு அல்தாஃபி அவர்கள் அளித்த பதிலகளையும்இன்ஷா அல்லாஹ் அடுத்த வாரம் காண்போம்.

    நன்றி: உணர்வு வார இதழ்

    0 கருத்துகள்:

    கருத்துரையிடுக

    உங்கள் விமர்சனகள், இறைவனுக்கு உண்மையாய் இருக்கு வேண்டுகிறோம்

    Related Posts Plugin for WordPress, Blogger...
     
    Copyright (c) 2011 Designed byDezMatix
    Other Links : TNTJ NEWS PORTAL, Online PJ,