Related Posts Plugin for WordPress, Blogger...

Tamil Nadu Thowheed Jamaath - Seven Wells Branch Headline Animator

அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைத்து தானும் நல்ல அமல் செய்து தான் ஒரு முஸ்லிம் என்று கூறுபவனை விட அழகிய சொல்லுக்குரியவன் யார் ?

10 -ஆம் வகுப்பி தேர்வு : மாநிலத்தில் முதலிடம் பிடித்த முஸ்லீம் மாணவி




இன்று 10 ஆம் வகுப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

நெல்லை அரசுப் பள்ளி மாணவி ஜாஸ்மின் 495 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடத்தை பெற்றுள்ளார். அலஹம்துலில்லாஹ். ஆரனியை சேர்ந்த நஸ்ரின் பாத்திமா 493 மதிப்பெண் எடுத்து மாநிலத்தில் 3-ஆம் இடம் பிடித்துள்ளார்.







ஏற்கனவே UPSC (IAS,IPS,IFS) தேர்வுகளில் பைஸ்ல் என்ற மாணவர் இந்திய அளவில் முதலிடம் பெற்றார் என்பது குறிப்பிடதக்கது. SSLC தேர்வில் 82.56 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.


மாணவர்கள் 79.4 சதவீதமும், மாணவிகள் 85.5 சதவீதமும் தேர்ச்சியடைந்துள்ளனர். இதன்மூலம் இந்த ஆண்டும் மாணவர்களைவிட மாணவிகளே அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்


4 பேர் இரண்டாம் இடம்:

செங்கல்பட்டைச் சேர்ந்த பிரியங்கா, கூடலூரைச் சேர்ந்த நிவேதா, புதுச்சேரியைச் சேர்ந்த தமிழரசன், கரூரைச் சேர்ந்த சிவப்பிரியா ஆகிய நான்கு பேரும் 494 மதிப்பெண்கள் எடுத்து 2வது இடத்தைப் பிடித்துள்ளனர்.


3வது இடம் பிடித்த 10 பேர்:

அதே போல மதுரை ஜெயமுருகன், நாகராஜன், புளியங்குடி ரம்யா, நெல்லை ஜெயலின், நாமக்கல் இந்துஜா, கரூர் ராஜ்சூர்யா, பரமக்குடி பிரதீப்குமார், திலகவதி, செய்யாறு செந்தில்குமார், புதுச்சேரி ரேவதி ஆகிய 10 பேரும் 493 மதிப்பெண்கள் எடுத்து 3வது இடத்தைப் பிடித்துள்ளனர்.


கணிதப் பாடத்தில் இந்த ஆண்டு 2,399 பேர் தான் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு கணிதத்தில் 5,112 பேர் முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

மெட்ரிக் தேர்வு - பவித்ரா முதலிடம்:

மெட்ரிக் தேர்வில் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த பவித்ரா 495 மதிப்பெண்களைப் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். சென்னை முகப்பேரைச் சேர்ந்த ஸ்ரீவந்தனா, பாண்டிச்சேரியைச் சேர்ந்த ஸ்ரேயா அகர்வால் ஆகியோர் 493 மதிப்பெண்களைப் பெற்று இரண்டாமிடத்தைப் பிடித்துள்ளனர்

Read More...

தவ்ஹீத் ஜமாஅத் குறித்து டாக்டர் அப்துல்லாஹ்வின் நிலைப்பாடு

தவ்ஹீத் ஜமாஅத் குறித்து டாக்டர் அப்துல்லாஹ் அவர்களின் நிலைப்பாடு .....மேலும் விவரங்களுக்கு கிளிக் செய்யவும்
Read More...

Download பகுதி

To download: Right click and “Save Target As” Download செய்வதில் பிரச்சனை இருந்த்தால் Contact: tntjedu@gmail.com



காதலர் தினம் NOTICE



UPSC Instruction Details




அதிக மதிப்பெண் பெறுவது எப்படி ? - PDF File



அதிக மதிப்பெண் பெறுவது எப்படி ? - Video Part 1



அதிக மதிப்பெண் பெறுவது எப்படி ? - Video Part 2



தமிழ் குர்ஆன் PDF format



குர்ஆன் (ஆங்கிலத்தில்)



ஸஹீஹ் புஹாரி (தமிழில்)



ஸஹீஹ் முஸ்லீம் (தமிழில்) பகுதி - 1



ஸூனன் அபூதாவுது (தமிழில்)



புஹாரி, முஸ்லீம், அபுதாவூத், திர்மிதி Search வசதியோடு (ஆங்கிலத்தில்)



ஸஹீஹ் புஹாரி, முஸ்லீம், அபுதாவூத் (ஆங்கிலத்தில்) - HTML format




துஆக்கள் தமிழில் (குர்ஆனில் இருந்து தொகுக்கப்பட்து)




துஆக்கள் தமிழில் (ஹதீஸில் இருந்து தொகுக்கப்பட்து)



Quran Tafsir ( Ibn-kathir)



English Quran with "Search" (software)



தமிழ் ஃபான்ட்



தமிழ் யுனிகோடு ஃபான்ட்



WinRar_Software

VLC Media Player

Adobe Acrobat Reader (PDF Viewer)

Read More...

" ஒடுக்கபட்டோரின் உரிமை மாநாடு "


முஸ்லிம்களின் கல்வி , வேலை வாய்ப்பு , அரசியல் , பொருளாதார நிலை எவ்வாறு உள்ளது என்பதை கண்டறிவதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா அவர்களின் அறிக்கை நாடாளுமன்றத்தில் 2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தாக்கல் செய்யப்பட்டது ... இந்த அறிக்கையில் முஸ்லிம்களின் அவல நிலை பற்றி நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா அவர்கள் ஆய்வு செய்து வெளியிட்ட சில முக்கிய தகவல்கள் ...

முஸ்லிம்களில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை படித்தவர்கள் சதவீதம் 65.31
5 முதல் 8 வரை படித்தவர்கள் 15.14 சதவீதம்
8 முதல் 10 வரை படித்தவர்கள் 10.96 சதவீதம்
10 முதல் 12 வரை படித்தவர்கள் 12 சதவீதம்
பட்ட படிப்பு படித்தவர்கள் 3 .6 சதவீதம் ( அதாவது 100௦ முஸ்லிம்களில் 3 பேர் மட்டுமே பட்ட படிப்பு படித்துள்ளனர்.




பொருளாதாரத்தில் முஸ்லிம்களின் நிலை தலித் மக்களையும் மிஞ்சும் அளவுக்கு உள்ளது
முஸ்லிம் குடும்பங்களின் சராசரி மாத வருமானம் 1832 ரூபாய் 20 காசுகள்
ஒவ்வொரு 100 முஸ்லிம்களிலும் 31 பேர் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளனர் ( அதாவது சொந்தமாக இடம் இல்லாதவர்கள் , 2 ஆடைக்கும் குறைவாக உள்ளவர்கள் , ஒரு வேளை உணவு மட்டும் உண்பவர்கள் , படிப்பறிவு இல்லாதவர்கள் , கூலி வேலை செய்பவர்கள் , பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாதவர்கள் , நிலையான தங்குமிடம் இல்லாதவர்கள் )


இந்த அவல நிலையை மாற்றுவதற்காக நீதிபதி மிஸ்ரா அவர்கள் செய்த சில முக்கிய பரிந்துரைகள்

முஸ்லிம்களுக்கு நாடு முழுவதும் கல்வி , வேலை வாய்ப்பு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் நூற்றுக்கு பத்து என்ற கணக்கில் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்.
முஸ்லிம்களுக்கு சுயதொழில் தொடங்க வட்டியில்லா கடனுதவி வழங்க வேண்டும் .

பொருளாதாரத்தில் பின்தங்கிய முஸ்லிம்களுக்கு சமையல் காஸ் இணைப்பு குறைந்த விலையில் வழங்க வேண்டும் .
சொந்த வீடு இல்லாத ஏழை முஸ்லிம்களுக்கு இலவச வீடு கட்டி தர வேண்டும்.

இந்த கோரிக்கைகளை அமல்படுத்த வலியுறுத்தி ஜூலை 4 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தவிருக்கும் 15 லட்சம் முஸ்லிம்கள் பங்கேற்கக்கூடிய ஒடுக்கபட்டோரின் மாநாட்டில் பங்கேற்று நமது உரிமையை வென்றெடுப்போம் ...இன்ஷா அல்லாஹ்...
Read More...
Related Posts Plugin for WordPress, Blogger...
 
Copyright (c) 2011 Designed byDezMatix
Other Links : TNTJ NEWS PORTAL, Online PJ,