AIEEE- என்ற நுழைவு தேர்வு இந்தியாவில் உள்ள மிக உயர்ந்த கல்வி நிறுவனங்களில் B.E/B.Tech, B.Arch/B.Plan படிக்க நடத்தும் தேர்வாகும். இந்தியாவில் பல இடங்களில் NIT-என்ற உயர்கல்வி நிறுவனம் மத்திய அரசால் நடத்தப்பட்டு வருகின்றது. இதை தவிற பிட்ஸ் பிலானி, மற்றும் நிகர் நிலை பல்கலை கழகங்கள் மற்றும் டெல்லி பல்கலை கழகம் போன்ற மத்திய பல்கலை கழகங்கள் ஆகியவற்றில் B.E/B.Tech படிக்க AIEEE என்ற நுழைவு தேர்வை மத்திய அரசு நடத்துகின்றது, இதில் நாம் தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண் எடுப்பதின் மூலம் இந்தியாவின் மிக உயர்ந்த கல்வி நிறுவனங்களில் பயில முடியும். இந்த உயர்கல்வி நிறுவங்களில் கல்வி தரம் உயர்ந்ததாக இருக்கும் , இங்கு படிப்பவர்களுக்கு வளாக தேர்வு (campus interview) மூலம் மிக எளிதில் வேலைகிடைகின்றது. இறுதி ஆண்டு படிக்கும் போதே அதிக சம்பளத்தில் படித்ததற்க்கு ஏற்ப நல்ல வேலைகிடைக்கின்றது. இலவசமாக வெளி நாட்டில் மேல்படிப்பு படிக்க வாய்ப்புகளும் கிடைக்கின்றன NIT-ல் படிக்கும் முஸ்லீம் மாணவர்களுக்கு மத்திய அரசு சிறப்பு இலவச கல்வி உதவி திட்டத்தை நடைமுறைபடுத்துகின்றது. இந்தியாவில் பொறியியல் துறையில் ஐஐடி-க்கு அடுத்து முன்னனியில் இருப்பது NIT தான். தமிழகத்தில் திருச்சியிலும், பாண்டிசேரியிலும் NITஉள்ளது. இன்னும் சில NIT-கள் தமிழகத்தில் வர இருக்கின்றது.
இட ஒதுக்கீடு : முஸ்லீம்களையும் சேர்த்து பிற்படுத்தபட்ட வகுப்பினருக்கா 27% இட ஒதுக்கீடு உள்ளது.
AIEEE 2010 தேர்வை பற்றிய முழு விபரம் : விண்ணப்பம் பெற கடைசி தேதி 14.01.2011. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சமர்பிக்க கடைசி தேதி 20.01.2011. விண்ணப்பத்தின் விலை ரூ.600, B.Arch தேர்வு எழுதுவதாக இருந்தால் கூடுதலாக ரூ.400 கட்ட வேண்டும். 01.05.2010 அன்று காலை, மாலை என இரண்டு தேர்வுகள் நடைபெறும். சென்னை மதுரை, கோவை ஆகிய மூன்று நகரங்களில் தேர்வு நடைபெறும் இன்ஷா அல்லாஹ்.
யார் இந்த தேர்வை எழுத முடியும்?
+2-வில் கணிதம், இயற்பியல், வேதியியல் படிக்கும் மாணவர்கள், +2 வொகேஷனல் (vocational) குரூப் படிக்கும் மாணவர்கள், 3 ஆண்டு டிப்ளமோ படித்த மாணவர்கள் மட்டுமே இந்த தேர்வை எழுதமுடியும். +2-வில் குறைந்த்தது 40% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். 2009 மற்றும் 2010-ல் தேர்சி பெற்ற மாணவர்கள் மற்றும் 2011-ல் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் இந்த தேர்வை எழுதலாம். மாணவர் அதிகபட்சமாக மூன்று முறை மட்டுமே AIEEE தேர்வு எழுத முடியும். மாணவர்கள் அக்டோபர் 1, 1986 ஆம் ஆண்டிற்க்கு பிறகு பிறந்திருக்க வேண்டும்
விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம் : Regional CBSE மையங்கள் மற்றும் சின்டிகேட் வங்கியின் கீழ்க்கானும் மையங்கள், (தபால் மூலமும் விண்ணப்பம் பெறலாம்.) தமிழகத்தில் சின்டி கேட் வங்கியின் சில கிளைகளில் கிடைக்கும். சென்னை (அண்ணா சாலை, அடையாறு, அண்ணா நகர் மேற்கு), கோவை (ஒப்பனகார வீதி), மதுரை (பேலஸ் ரோடு), வேலூர் ( முண்டி தெரு, வேலூர் - 4 ) திருச்சி (மேற்கு பொவ்லிவார்டு ரோடு , திருச்சி - 2 ) நெல்லை ( மேற்கு கார் தெரு, நிஸாம் காம்ப்லெக்ஸ், திரு நெல் வேலை - 6 ) ஆகிய கிளைகளில் கிடைக்கும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை “AIEEE Unit, CBSE, PS1-2,Institutional Area,IP Extension,Patparganj,Delhi-110092” என்ற முகவரிக்கு அனுப்பவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க : முதலில் விண்ணப்பிக்கும் ஒரு லட்சம் மாணவர்கள் ஆன்லைன் முறையில் (கம்ப்யூட்டரில்) தேர்வு எழுதுவார்கள். மற்றவர்கள் தேர்வறையில் தேர்வு எழுதுவார்கள். ஆன்லைனில் விண்ணப்பங்களை சமர்பிக்க கடைசி தேதி 14.01.2010. தேர்வு கட்டணம் ரூ.400. இந்த இணையத்தில் www.aieee.nic.in விண்ணப்பிக்கவும். தமிழகத்தில் முதலில் விணப்பிக்கும் 15,000 பேர் ஆன்லைனில் தேர்வு எழுதுவார்கள். விண்ணப்பிக்கும் போது ஆன்லைனில் தேர்வு எழுதுவதா அல்லது தேர்வறையில் தேர்வு எழுதுவதா என மாணவர்கள் குறிப்பிடலாம்.அதற்க்கேற்ப்ப இடம் ஒதுக்கப்படும்.
இந்த தேர்வுக்கு தயாராவது எப்படி?
இது வருடா வருடம் நடக்கும் தேர்வாகும். எனவே கடந்த 5 ஆண்டு கேள்விதாள்களை பார்த்தால் பாடத்தின் எந்த பகுதியில் இருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றது என அறிந்து கொள்ளலாம். அந்த பாட பகுதிகளை நன்றாக ஆராய்ந்து படித்தாலே போதும். இந்த கேள்விதாள்கள், புத்தகங்கள் முக்கிய புத்தக கடைகளில் கிடைக்கும். மேலும் CBSC-யின் +2 ஆம் வகுப்பு புத்தகங்கள் வாங்கிபடித்தால் இது போன்ற தேர்வுகளுக்கு பயன் உள்ளதாக இருக்கும். பொதுவாக தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பது என்ற கட்டுரை தொடராக நமது உணர்வு வார இதழில் வெளிவந்து கொண்டு இருக்கின்றது. அதை பாருங்கள்
இந்த தேர்வை எழுதும் முஸ்லீம் மாணவரகளின் எண்ணிக்கை மிக மிக குறைவு, காரணம், இந்த நுழைவு தேர்வுகளை பற்றி முஸ்லீம் சமுதாயம் அறியாமல் இருப்பதும், அறிந்திருந்தாலும் இதெல்லாம் மிக கடினம் என்று ஒதுக்கி விடுவதாலும் தான், உண்மையில் நன்றாக படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இத்த தேர்வுகள் கடினமில்லை. மாணவர்களே! தேர்வுகள் கடினம் என்ற தவறான சிந்தனையை குப்பையில் போடுங்கள், எந்த தேர்வையும் சந்தித்து சாதிக்க நம்மோடு அல்லாஹ் இருகின்றான், அல்லாஹ்விம் மீது நம்பிக்கைவையுங்கள் அவனிடம் வலியுத்தி கேளுங்கள், கடினமாக உழைத்து படியுங்கள் நிச்சயம் அல்லாஹ் நமக்கு வெற்றியை தருவான் இன்ஷா அல்லாஹ்.
மேலும் இந்த தேர்வை பற்றிய முழுவிபரம் அறிய இந்த www.aieee.nic.in தளத்தை பாருங்கள். இந்த தேர்வு சம்மந்தமாக உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் பெற ahamedibrahim87@gmail.com மின் அஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
- சமுதாய பணி தொடர இறைவினிடம் ப்ரார்த்திப்பிராக !
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
உங்கள் விமர்சனகள், இறைவனுக்கு உண்மையாய் இருக்கு வேண்டுகிறோம்