Related Posts Plugin for WordPress, Blogger...

Tamil Nadu Thowheed Jamaath - Seven Wells Branch Headline Animator

அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைத்து தானும் நல்ல அமல் செய்து தான் ஒரு முஸ்லிம் என்று கூறுபவனை விட அழகிய சொல்லுக்குரியவன் யார் ?
கல்வி செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கல்வி செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

எழுதி படிக்கும் குழந்தை சிறந்த மாணவனாக வளரும்

லண்டன், ஜன.25:


நார்வே நாட்டின் ஸ்தவஞ்சர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ஆன்னி மான்ஜென் மற்றும் பிரான்சின் மார்செல்லி பல்கலைக்கழக நரம்பியல் நிபுணர் ஜீன் லக் வேலே இது தொடர்பான ஆய்வில் ஈடுபட்டனர். இதற்காக இரு குழுக்களாக குழந்தைகள் பயன்படுத்தப்பட்டனர். புதிய வார்த்தைகள் கொடுக்கப்பட்டன. ஒரு குழு கையால் எழுதி படிக்கவும், மற்றொரு குழு கம்ப்யூட்டரில் டைப் செய்து படிக்கவும் அறிவுறுத்தப்பட்டனர்.

ஒரு வார கால ஆய்வுக்கு பின், கையால் எழுதி படித்த மாணவர்கள் சிறந்த ஞாபக சக்தியுடன் வார்த்தைகளை நினைவு கூர்ந்தனர். ஆனால், கம்ப்யூட்டரில் டைப் செய்தவர்களால் வார்த்தைகளை ஞாபகத்திற்கு கொண்டு வர முடியவில்லை.

எழுதும் போது மூளையின் உணரும் பகுதியில் எழுத்துக்களின் உருவம் படிந்து விடுகிறது. ஆனால், டைப் செய்யும் போது அவ்வாறு படிவதில்லை. டைப் செய்வது படிப்பதற்கு வலு சேர்ப்பதில்லை.

இதேபோல், உடல் அசைவுகளுடன் கூடிய பேச்சுகள், விளக்கங்கள் எளிதில் மூளையில் படிந்து விடுகின்றன. உடல் அசைவுகள் இல்லாத பேச்சுகள், விளக்கங்கள் எளிதில் மூளையில் படிவதில்லை. மற்றொருவர் உடல் அசைவுகளுடன் பேசும் போது எளிதில் விஷயங்கள் மனதில் பதியும். அதையே நாம் நம் உடல் அசைவுகளுடன் செய்யும் போது பதிவதில்லை போன்றவை ஆய்வில் தெரிய வந்துள்ளன.

நன்றி : தினகரன் செய்தித்தாள்
Read More...

அதிக மதிப்பெண் பெறுவது எப்படி என்ற மாணவரணியின் நிகழ்ச்சி நேற்று சிறப்பாக நடைபெற்றது

இதில் மாணவ மாணவிகள் திரளாக கலந்து பயன் பெற்றனர் , மேலும் தங்கள் சந்தேங்கங்களையும் நிவர்த்தி பெற்று சென்றனர்.
இந்நிகழ்ச்சியில்  சிறப்புரை ஆற்றிய " ஷபி B.E  " மிக சிறப்பாக மாணவர்கள் தேர்வுகள் காலங்களில் என்ன என்ன செய்ய வேண்டும் மற்றும் என்ன செய்ய கூடாது போன்ற ஆலோசனைகளை கூறினார், நிகழ்ச்சி ஏற்பாட்டை கிளை மாணவரணி இறைவனின் அருளால் நன்றாக செய்தனர்


Read More...

இந்தியாவில் உள்ள உயர் கல்வி நிறுவங்களில் பொறியியல் (B.E/B.Tech) படிக்க AIEEE தேர்வு

AIEEE- என்ற நுழைவு தேர்வு இந்தியாவில் உள்ள மிக உயர்ந்த கல்வி நிறுவனங்களில் B.E/B.Tech, B.Arch/B.Plan படிக்க நடத்தும் தேர்வாகும். இந்தியாவில் பல இடங்களில் NIT-என்ற உயர்கல்வி நிறுவனம் மத்திய அரசால் நடத்தப்பட்டு வருகின்றது. இதை தவிற பிட்ஸ் பிலானி, மற்றும் நிகர் நிலை பல்கலை கழகங்கள் மற்றும் டெல்லி பல்கலை கழகம் போன்ற மத்திய பல்கலை கழகங்கள் ஆகியவற்றில் B.E/B.Tech படிக்க AIEEE என்ற நுழைவு தேர்வை மத்திய அரசு நடத்துகின்றது, இதில் நாம் தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண் எடுப்பதின் மூலம் இந்தியாவின் மிக உயர்ந்த கல்வி நிறுவனங்களில் பயில முடியும். இந்த உயர்கல்வி நிறுவங்களில் கல்வி தரம் உயர்ந்ததாக இருக்கும் , இங்கு படிப்பவர்களுக்கு வளாக தேர்வு (campus interview) மூலம் மிக எளிதில் வேலைகிடைகின்றது. இறுதி ஆண்டு படிக்கும் போதே அதிக சம்பளத்தில் படித்ததற்க்கு ஏற்ப நல்ல வேலைகிடைக்கின்றது. இலவசமாக வெளி நாட்டில் மேல்படிப்பு படிக்க வாய்ப்புகளும் கிடைக்கின்றன NIT-ல் படிக்கும் முஸ்லீம் மாணவர்களுக்கு மத்திய அரசு சிறப்பு இலவச கல்வி உதவி திட்டத்தை நடைமுறைபடுத்துகின்றது. இந்தியாவில் பொறியியல் துறையில் ஐஐடி-க்கு அடுத்து முன்னனியில் இருப்பது NIT தான். தமிழகத்தில் திருச்சியிலும், பாண்டிசேரியிலும் NITஉள்ளது. இன்னும் சில NIT-கள் தமிழகத்தில் வர இருக்கின்றது.

இட ஒதுக்கீடு : முஸ்லீம்களையும் சேர்த்து பிற்படுத்தபட்ட வகுப்பினருக்கா 27% இட ஒதுக்கீடு உள்ளது.
AIEEE 2010 தேர்வை பற்றிய முழு விபரம் : விண்ணப்பம் பெற கடைசி தேதி 14.01.2011. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சமர்பிக்க கடைசி தேதி 20.01.2011. விண்ணப்பத்தின் விலை ரூ.600, B.Arch தேர்வு எழுதுவதாக இருந்தால் கூடுதலாக ரூ.400 கட்ட வேண்டும். 01.05.2010 அன்று காலை, மாலை என இரண்டு தேர்வுகள் நடைபெறும். சென்னை மதுரை, கோவை ஆகிய மூன்று நகரங்களில் தேர்வு நடைபெறும் இன்ஷா அல்லாஹ்.

யார் இந்த தேர்வை எழுத முடியும்?

+2-வில் கணிதம், இயற்பியல், வேதியியல் படிக்கும் மாணவர்கள், +2 வொகேஷனல் (vocational) குரூப் படிக்கும் மாணவர்கள், 3 ஆண்டு டிப்ளமோ படித்த மாணவர்கள் மட்டுமே இந்த தேர்வை எழுதமுடியும். +2-வில் குறைந்த்தது 40% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். 2009 மற்றும் 2010-ல் தேர்சி பெற்ற மாணவர்கள் மற்றும் 2011-ல் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் இந்த தேர்வை எழுதலாம். மாணவர் அதிகபட்சமாக மூன்று முறை மட்டுமே AIEEE தேர்வு எழுத முடியும். மாணவர்கள் அக்டோபர் 1, 1986 ஆம் ஆண்டிற்க்கு பிறகு பிறந்திருக்க வேண்டும்

விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம் : Regional CBSE மையங்கள் மற்றும் சின்டிகேட் வங்கியின் கீழ்க்கானும் மையங்கள், (தபால் மூலமும் விண்ணப்பம் பெறலாம்.) தமிழகத்தில் சின்டி கேட் வங்கியின் சில கிளைகளில் கிடைக்கும். சென்னை (அண்ணா சாலை, அடையாறு, அண்ணா நகர் மேற்கு), கோவை (ஒப்பனகார வீதி), மதுரை (பேலஸ் ரோடு), வேலூர் ( முண்டி தெரு, வேலூர் - 4 ) திருச்சி (மேற்கு பொவ்லிவார்டு ரோடு , திருச்சி - 2 ) நெல்லை ( மேற்கு கார் தெரு, நிஸாம் காம்ப்லெக்ஸ், திரு நெல் வேலை - 6 ) ஆகிய கிளைகளில் கிடைக்கும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை “AIEEE Unit, CBSE, PS1-2,Institutional Area,IP Extension,Patparganj,Delhi-110092” என்ற முகவரிக்கு அனுப்பவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க : முதலில் விண்ணப்பிக்கும் ஒரு லட்சம் மாணவர்கள் ஆன்லைன் முறையில் (கம்ப்யூட்டரில்) தேர்வு எழுதுவார்கள். மற்றவர்கள் தேர்வறையில் தேர்வு எழுதுவார்கள். ஆன்லைனில் விண்ணப்பங்களை சமர்பிக்க கடைசி தேதி 14.01.2010. தேர்வு கட்டணம் ரூ.400. இந்த இணையத்தில் www.aieee.nic.in விண்ணப்பிக்கவும். தமிழகத்தில் முதலில் விணப்பிக்கும் 15,000 பேர் ஆன்லைனில் தேர்வு எழுதுவார்கள். விண்ணப்பிக்கும் போது ஆன்லைனில் தேர்வு எழுதுவதா அல்லது தேர்வறையில் தேர்வு எழுதுவதா என மாணவர்கள் குறிப்பிடலாம்.அதற்க்கேற்ப்ப இடம் ஒதுக்கப்படும்.

இந்த தேர்வுக்கு தயாராவது எப்படி?

இது வருடா வருடம் நடக்கும் தேர்வாகும். எனவே கடந்த 5 ஆண்டு கேள்விதாள்களை பார்த்தால் பாடத்தின் எந்த பகுதியில் இருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றது என அறிந்து கொள்ளலாம். அந்த பாட பகுதிகளை நன்றாக ஆராய்ந்து படித்தாலே போதும். இந்த கேள்விதாள்கள், புத்தகங்கள் முக்கிய புத்தக கடைகளில் கிடைக்கும். மேலும் CBSC-யின் +2 ஆம் வகுப்பு புத்தகங்கள் வாங்கிபடித்தால் இது போன்ற தேர்வுகளுக்கு பயன் உள்ளதாக இருக்கும். பொதுவாக தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பது என்ற கட்டுரை தொடராக நமது உணர்வு வார இதழில் வெளிவந்து கொண்டு இருக்கின்றது. அதை பாருங்கள்
இந்த தேர்வை எழுதும் முஸ்லீம் மாணவரகளின் எண்ணிக்கை மிக மிக குறைவு, காரணம், இந்த நுழைவு தேர்வுகளை பற்றி முஸ்லீம் சமுதாயம் அறியாமல் இருப்பதும், அறிந்திருந்தாலும் இதெல்லாம் மிக கடினம் என்று ஒதுக்கி விடுவதாலும் தான், உண்மையில் நன்றாக படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இத்த தேர்வுகள் கடினமில்லை. மாணவர்களே! தேர்வுகள் கடினம் என்ற தவறான சிந்தனையை குப்பையில் போடுங்கள், எந்த தேர்வையும் சந்தித்து சாதிக்க நம்மோடு அல்லாஹ் இருகின்றான், அல்லாஹ்விம் மீது நம்பிக்கைவையுங்கள் அவனிடம் வலியுத்தி கேளுங்கள், கடினமாக உழைத்து படியுங்கள் நிச்சயம் அல்லாஹ் நமக்கு வெற்றியை தருவான் இன்ஷா அல்லாஹ்.

மேலும் இந்த தேர்வை பற்றிய முழுவிபரம் அறிய இந்த www.aieee.nic.in தளத்தை பாருங்கள். இந்த தேர்வு சம்மந்தமாக உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் பெற ahamedibrahim87@gmail.com மின் அஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
- சமுதாய பணி தொடர இறைவினிடம் ப்ரார்த்திப்பிராக ! 
Read More...
Related Posts Plugin for WordPress, Blogger...
 
Copyright (c) 2011 Designed byDezMatix
Other Links : TNTJ NEWS PORTAL, Online PJ,