நேற்று ஒரு செய்தி இன்று ஒரு செய்து என தன் இஷ்டத்துக்கு செய்திகளை பரப்பி வருகிறது
அதாரம் பின் வருமாறு :
தினகரன் செய்தி வெளிவந்த நாள் : 12 . 01 . 2011
தினகரன் செய்திபகுதி |
தினகரன் செய்தி வெளிவந்த நாள் : 13 . 01 . 2011
அதிற்கு இன்று வெளியான செய்தியில் பின்வரும் தகவல் இடம் பென்று இருந்தது
வேலைக்கார பெண் கொலையில் மர்மம் பிராட்வேயில் மக்கள் மறியல்
சென்னை, ஜன.13:
பிராட்வே பெரியண்ண முதலி தெருவை சேர்ந்தவர் முகமது யூனுஸ் (36). சவுகார்பேட்டையில் ஒரு நகைக்கடையில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ஜெரினா. இவர்களது வீட்டில், ஆசிர்வாதபுரத்தை சேர்ந்த ரூபாவதி (65), வீட்டு வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் மாலையில், ஒன்றரை பவுன் நகையை காணவில்லை எனக்கூறி, ரூபாவதியிடம் ஜெரினா சண்டை போட்டுள்ளதாக தெரிகிறது. இதில் ஆத்திரம் அடைந்த ஜெரினா, டைனிங் டேபிளில் இருந்த கத்தியை எடுத்து ரூபாவதி கழுத்தில் குத்தியிருக்கிறார். இதில், ரூபாவதி அதே இடத்தில் துடிதுடித்து இறந்தார். இதில் பயந்து போன ஜெரினா, தனது கணவருக்கு தகவல் தெரிவித்து விட்டு தப்பினார்.
இதுகுறித்த, ஏழுகிணறு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் விசாரித்து வந்தார். இதற்கிடையே, இரவில் ஜெரினா சரணடைந்தார். அவரிடம் போலீசார் விசாரித்தனர். எனது நகையை எடுத்து மறைத்திருந்ததால் ஆத்திரமடைந்து கத்தியால் குத்திவிட்டேன் என்றார். ஆனால், இதில் போலீசாருக்கு நம்பிக்கை இல்லை.
காலையில் செல்லும் கணவர் மாலையில்தான் வீட்டுக்கு வருவார். அதுவரை இவர்கள் இருவரும்தான் வீட்டில் இருப்பார் கள். ஏதேனும் விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்து, அதைப் பற்றி அறிந்து வைத்திருக்கும் ரூபாவதியால் தனக்கு பிரச்னை வருமோ என்ற பயத்தில் ஜெரினா கொலை செய்திருக்கலாமோ என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.
மூதாட்டி உடலை கோணிப்பையில் வைத்து மூட்டை கட்ட முயன்றுள்ளார் ஜெரினா. பின்னர், அப்படியே போட்டுவிட்டு தலைமறைவாகி விட்டார். எதேச்சையாக கொலை நடந்திருந்தால் கோணிப்பையில் போட்டு மறைக்க முயன்றது ஏன்? ஜெரினாவால் மட்டும் கோணிப்பையில் மூதாட்டியின் உடலை திணித்திருக்க முடியுமா? வேறு யாராவது உடன் இருந்தார்களா? என்ற சந்தேகங்கள் போலீசுக்கு எழுந்துள்ளன.
இந்நிலையில், ரூபாவதி மீது வேண்டுமென்றே திருட்டுப் பட்டம் கட்டியிருக்கின்றனர். அவரை கொலை செய்ததற்கு ஏதாவது பின்னணி இருக்கலாம். எனவே நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி, ஆசீர்வாதபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 500 பேர் நேற்று பிராட்வே சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து முத்தியால்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் சமரசம் பேசினர். தீவிர விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்கிறோம் என்று உறுதி அளித்ததன் பேரில் மறியல் கைவிடப்பட்டது. இந்த மறியலால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பெண் கொலை சம்பவத்தில் நடவடிக்கை கோரி பொதுமக்கள் சென்னை பிராட்வேயில் மறியல் செய்தனர். |
இதன் மூலம் இவர்கள் இன்று வரை செய்துவந்த பல செய்திகள் பொய்யை இருக்குமோ என்று என்ன தோன்றுகிறது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
உங்கள் விமர்சனகள், இறைவனுக்கு உண்மையாய் இருக்கு வேண்டுகிறோம்