Related Posts Plugin for WordPress, Blogger...

Tamil Nadu Thowheed Jamaath - Seven Wells Branch Headline Animator

அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைத்து தானும் நல்ல அமல் செய்து தான் ஒரு முஸ்லிம் என்று கூறுபவனை விட அழகிய சொல்லுக்குரியவன் யார் ?

அதிஷ்டத்தை நம்பாமல், உழைப்பையும், திறமையையும் நம்புங்கள்.( தேர்வு நேர ஆலோசனை 2)

Posted on
  • சனி, 26 பிப்ரவரி, 2011
  • by
  • Ahamed Ibrahim S N
  • in
  • அதிஷ்டத்தை நம்பாமல், உழைப்பையும், திறமையையும் நம்புங்கள்.

    குறிப்பாக பிளஸ் மாணவர்கள் தங்களது உயர்கல்வி வாய்ப்பை பிரகாசமானதாக்க மிகுந்த ஆர்வமுடன் தேர்வில் அதிக மதிப்பெண்களை குவிப்பதற்கான சிரத்தையில் ஈடுபட்டுருப்பதை உணரமுடிகிறது.

    முறையான திட்டமிடல் மற்றும் ஆர்வத்துடன் படித்தால் அனைத்து மாணவர்களாலும் அதிக மதிப்பெண் பெற முடியும். தேர்வுக்கு எவ்வாறு திட்டமிட வேண்டும் என்பதையும்பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளையும் எளியமுறையில் விளக்குகிறார் கோபாலபுரம் டி.ஏ.வி.பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியரும்ஆர்.எம்.கே.குழும பள்ளிகளின் சீனியர் முதல்வருமான டாக்டர் சி.சதீஷ். இவரது மாணவர்கள் தேசியமாநில அளவிலான ரேங்க் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    முதலில் அனைத்து மாணவர்களும் தங்களால் அதிக மதிப்பெண் எடுக்க முடியும் என்று நம்புங்கள். தற்போது பொதுத்தேர்வுகள் நெருங்கிக்கொண்டிருப்பதால் புதியதாக ஒரு பாடப் பகுதியை படிப்பதை தவிர்ப்பது நல்லது. இது வரை படித்த பாடங்களை 'ரிவ்யூ செய்ய வேண்டும்.  அதாவது ஒரு பாடத்தில் முதல் வார்த்தையிலிருந்து கடைசி வார்த்தை வரை வேகமாகவும் கவனமாகவும் படிக்க வேண்டும். ஒரு மதிப்பெண்இரு மதிப்பெண்ஐந்து மதிப்பெண் உட்பட அனைத்து விதமான கேள்விகளுக்கும் எளிதாக பதில் அளிக்க இம்முறை உதவும்.

    அனைத்து பாடங்களின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கான பதில்கள் தெரிகிறதா என்று மாணவர்கள் சோதித்துப் பார்க்க வேண்டும். வகுப்பில் ஆசிரியர்கள் அறிவுறுத்திய முக்கியமான கேள்விகளையும்கேள்விகள் வேறு எந்தவகையில் கேட்கப்பட சாத்தியம் உள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பெற்றோர் ஆசிரியர் கழகத்தால் வெளியிடப்பட்டுள்ள வினா வங்கி புத்தகத்தையும் பயன்படுத்தலாம். மேலும் கடந்த ஐந்து அரசு பொதுத் தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகளையும் வைத்துஅவற்றிற்கான பதில்களை மனதிற்குள்ளேயே சொல்லிப்பார்க்க வேண்டும்.

    எந்த கேள்விகள் கடினமாக உணரப்படுகிறதோஅதற்கான பதில்களை கண்டிப்பாக எழுதிப்பார்க்க வேண்டும். அதேபோல்படிப்பதை எளிதில் ஞாபத்தில் வைத்துக் கொள்ள முடியாத மாணவர்களும் எழுதிப்பார்ப்பதை பழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும். இதுதவிரமாணவர்கள் தங்களுக்கே ஒரு சுயதேர்வு (டெஸ்ட்) வைத்து எழுதிப் பார்க்க வேண்டும். இதன்மூலம் மனதில் அந்த பதில்கள் நன்கு பதியும். தேர்வில் முழு மதிப்பெண்களை எடுக்க விரும்பும் மாணவர்கள் அனைத்து பாடங்களையும் தெளிவாக படித்திருக்க வேண்டும் என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.

    தேர்வு காலங்களில் படிப்புடன்உடல் ஆரோக்கியத்திற்கும் அதிக முக்கியத்துவம் தர வேண்டும். ஏனெனில் அனைத்திற்குமே அடிப்படை ஆரோக்கியம் தான். நல்ல சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும். பசியுடன் படிக்க வேண்டாம். அதிகமாகவும் சாப்பிட வேண்டாம். முக்கியமாக எண்ணெய் பொருட்கள், 'ஜங்க்உணவுகளை தவிர்க்கவும். தூக்கம் குறைந்தாலும் உடல்நலம் பாதிக்கப்படும். எனவேகுறைந்தது 6.00 மணிநேரம் உறங்க வேண்டும். தேர்வு நடைபெறும் காலங்களில் மணிநேரம் உறங்குவது அவசியம்.

    படிப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதும் அவசியம். வெளிச்சமும்காற்றோட்டமும் உள்ள ஒரு தனி அறையில் படிப்பது நல்லது. இல்லாவிட்டாலும்தொந்தரவு இல்லாத இடமாக இல்லாமல் இருந்தால் கூட போதுமானது. ஏனெனில் ஏற்ற சுற்றுப்புற சூழ்நிலை உங்கள் கவனத்தை சிதறாமல்ஆழமான கற்றலுக்கு வழிவகுக்கும்.

    படிக்கும்போது நேராக அமர்ந்து படிக்கவும். படுத்துக்கொண்டோசாய்வாகவோதொய்வாகவோ அமராதீர்கள். டிவி பார்த்துக்கொண்டே படிக்கும் பழக்கத்தை அறவே விட்டுவிடுங்கள். தேர்வு நாட்களில் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து வைப்பதும்நண்பர்களுடன் தேவையில்லாதவற்றை பற்றி பேசுவதையும் தவர்க்கவேண்டும். எதிர்மறையான எண்ணத்துடன் பேசுபவர்களிடம் இருந்து முற்றிலுமாக விலகி இருங்கள்.

    பல மணிநேரம் தொடர்ந்து படிப்பதை தவிர்ப்பது நல்லது. ஒவ்வொரு 1.30 மணிநேரத்திற்கு ஒருமுறை 30 நிமிடம் இடைவெளி விட்டு படிக்கலாம். அந்த 30 நிமிடங்களில் பிடித்த விளையாட்டை விளையாடலாம். தேர்வுக்கு முதல் நாளே தேவையான பேனாபென்சில்ரப்பர்ஸ்கேல் மற்றும் ஹால் டிக்கெட் போன்றவற்றை தயாராக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    தேர்வு மையத்திற்கு தேர்வு துவங்குவதற்கு ஒரு மணிநேரம் முன்னதாகவே சென்றுவிடுதல் நல்லது. தேர்வு மையத்தில் யாருடனும் பேசி அரட்டை அடிக்காமல்அமைதியாகவும்பதட்டமின்றியும் இருக்க வேண்டும். தங்களுக்கான இடத்தில் அமர்ந்த பிறகுஐந்து நிமிடம் பிராணயாமம் (மூச்சுப் பயிற்சி) செய்யவேண்டும். இது தேர்வு பயத்தையும்பதட்டத்தையும் குறைக்கும்.

    கேள்வித்தாள் கொடுக்கப்பட்டதும் கேட்கப்பட்டுள்ள கேள்விகளை ஒருமுறை கவனமாக படித்துப்பார்க்க வேண்டும். விடைத்தாளை வாங்கியதும் அதில் நிரப்ப வேண்டிய கட்டங்களை கவனமாக நிரப்ப வேண்டும். தேர்வு எழுதும் போது முதலில் நன்கு தெரிந்த கேள்விகளுக்கு பதிலெழுதிபின்னர் கடினமான கேள்விகளுக்கு பதிலளிக்கலாம். அதில் தவறேதும் இல்லை. இதனால் மதிப்பெண்கள் குறைக்கப்பட மாட்டது. கையெழுத்தை முடிந்தளவு தெளிவாக புரியும்படி எழுத வேண்டும். அதற்காக கையெழுத்தை சீர்செய்வதில் நேரத்தை செலவிட வேண்டும். குறிப்பிட்ட நேரத்திற்குள் எழுதி முடிக்கும்படி திட்டமிட்டு எழுத வேண்டும். ஒதுக்கப்பட்ட தேர்வு நேரத்தை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

    தேர்வு நேரத்திற்கு முன்பே எழுதி முடித்தால்எழுதியவற்றை சரிபார்க்கவும். அதில் தவறுகள் இருப்பதாக நீங்கள் உணர்ந்தால்அந்த இடத்தை அடித்துவிட்டு சரியான பதிலை தெளிவாக எழுதவும். தேர்வு நேரம் முடிவடையும் முன்பாக தேர்வு அறையை விட்டு வெளியேற வேண்டாம். தேர்வுக்கு முன்பாக அதிகமாக தண்ணீர் குடிப்பதையும் தவிர்த்தல் நல்லது. விடைத்தாளை இறுதியாக கொடுப்பதற்கு முன்பாகஉங்களின் பதிவு எண் உள்ளிட்ட விவரங்களை சரியாக விடைத்தாளில் எழுதியுள்ளீர்களாஎன்பதை மீண்டும் சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

    மாணவர்கள் தங்களைப் பற்றி தாழ்வு மனப்பான்மையைக் கொண்டிருக்க கூடாது. எதையும் சாதிக்க முடியும் என்று நம்ப வேண்டும். அதிஷ்டத்தை நம்பாமல்உழைப்பையும்திறமையையும் நம்புங்கள். அதிக மதிப்பெண்களை குவிக்க முடியும்.

    0 கருத்துகள்:

    கருத்துரையிடுக

    உங்கள் விமர்சனகள், இறைவனுக்கு உண்மையாய் இருக்கு வேண்டுகிறோம்

    Related Posts Plugin for WordPress, Blogger...
     
    Copyright (c) 2011 Designed byDezMatix
    Other Links : TNTJ NEWS PORTAL, Online PJ,