Related Posts Plugin for WordPress, Blogger...

Tamil Nadu Thowheed Jamaath - Seven Wells Branch Headline Animator

அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைத்து தானும் நல்ல அமல் செய்து தான் ஒரு முஸ்லிம் என்று கூறுபவனை விட அழகிய சொல்லுக்குரியவன் யார் ?

அன்புப் பெற்றோர்களே (தேர்வு நேர ஆலோசனை 1 )

Posted on
  • செவ்வாய், 22 பிப்ரவரி, 2011
  • by
  • Unknown
  • in
  • குழந்தையின் தேர்வுக்கு நீங்களும் கொஞ்சம் தயாராகணும்!

     

    எக்ஸாம் வரப்போகிறது... இன்னும் பொறுப்பில்லாமல் இருக்கிறியே... படிக்கவே மாட்டேங்கிற... என்னத்த மார்க் வாங்கப் போறியோ?" என்று குழந்தைகளைதிட்டித் தீர்ப்பவரா நீங்கள்குழந்தை படிக்க வேண்டும் என்பதில் நீங்கள் காட்டும் அக்கறை சரிதான். ஆனால்உங்கள் குழந்தையின் தேர்வுக்கு அவர்கள் மட்டுமல்லநீங்களும் கொஞ்சம் தயாராக வேண்டும். நீங்கள் கடைபிடிக்க வேண்டியது என்ன?

     

    நெருங்கிய உறவினர்களிடம் உங்கள் குழந்தையின் தேர்வு தேதிகளை தெரிவியுங்கள். அப்படி கூறுவதால்உறவினர்கள் குழந்தைகளின் தேர்வு சமயத்தில் உங்கள் வீட்டிற்கு வருவதை தவிர்க்கலாம். அப்படியே வந்து விட்டால்நாசூக்காக எடுத்துச் சொல்லி விடுங்கள்.

     

    அக்கம் பக்கத்து வீட்டினர்நண்பர்கள் போன்றோர்உங்கள் வீட்டிற்கு அரட்டை அடிக்க வந்தால்அவர்களையும் நாசுக்காகத் தவிர்த்து விடுங்கள்.

     

    சில பெற்றோர்பிள்ளைகளை மட்டும் படிக்கச் சொல்லிவிட்டுதாங்கள், 'டிவிபார்ப்பர். நீங்கள் 'டிவிபார்ப்பதை முதலில் நிறுத்துங்கள். குழந்தைகள் வேறு அறையில் உட்கார்ந்து படித்தாலும்அவர்கள் கவனம் முழுவதும் 'டிவி'யில் ஓடும் நிகழ்ச்சிகளில் தான் இருக்கும்.

     

    நீங்கள் வேலைக்கு செல்பவராக இருந்தால்உங்கள் குழந்தையின் தேர்வு நேரத்தில்லீவு போட்டு அவர்களுக்கு வேண்டிய உதவிகளை கட்டாயம் செய்ய வேண்டும். அப்போதும்டியூஷன்ஸ்கூல் என்று விட்டுவிட்டுஉங்கள் பங்களிப்பின் முக்கியத்துவத்தை மறந்துவிடாதீர்கள்.

     

    குழந்தைகளின் தேர்வு சமயத்தில்பாடம் சொல்லிக் கொடுக்கும் போது, "நன்றாகப் படித்திருக்கிறாய். நிச்சயமாக நிறைய மார்க் வாங்குவாய்" என்று ஊக்கமளியுங்கள். அப்படி இல்லாமல், "நீ படிச்ச படிப்புக்கு கோழி முட்டை தான் வாங்குவே... தேர்வு முடிவு வரட்டும்அப்பறம் உனக்கு வச்சுக்கிறேன்.." என்று எதிர்மறையாக கூறினால்அவர்கள் மனரீதியாக பாதிக்கப்படுவர். மேலும் ஒரு விதமான தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு ஓரளவு படித்ததையும் மறந்து போய்விடுவர்.

     

    பொதுவாக உங்கள் குழந்தையை மற்ற குழந்தைகளுடன் எப்போதும் ஒப்பிட்டுப் பேசாதீர்கள். ஒரே வீட்டில் மற்ற குழந்தைகள் இருந்தாலும் அவர்களுடன் ஒப்பிட்டு பேச வேண்டாம். (குறிப்பா என் மூத்த மகளை விட இளைய மகள் ரொம்ப புத்திசாலி இப்படியான பேச்சுகள்) தேர்வு நேரத்தில் அடுத்த வீட்டு குழந்தையை ஒப்பிட்டு, "அவனும் உன்ன மாதிரி தானே... அவன் மார்க் வாங்கலேநீ தண்டம்... படிச்சாத்தானேஎப்பவும் 'டிவிமுன்னாடியே உக்காந்திட்டிருந்துட்டு கடைசி நேரத்துல முட்டி மோதினாபடிப்பு எங்கே வரும்" என்று 'அர்ச்சனைசெய்யாதீர்கள்.

     

    சமையல் தவிரஇதர வேலைகளை குறைத்துக் கொண்டுகுழந்தைகள் படிப்பிற்கு துணை செய்யலாம். அல்லது அவர்கள் அருகில் அமர்ந்தவாறு நீங்களும் ஏதாவது புத்தகத்தை படித்துநீங்கள் உங்கள் குழந்தைகள் மீது கொண்டிருக்கும் அக்கறையை வெளிப்படுத்தலாம். இது மனரீதியாகநேர்மறையான விளைவை உங்கள் குழந்தையிடம் ஏற்படுத்தும்.

    1 கருத்துகள்:

    tnj சொன்னது…

    PFI , SDPI காட்டுமிராண்டி கும்பலின் ஈனச் செயல்
    http://tntjcovaikk.blogspot.com/2011/02/pfi-sdpi.html

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையில் குர்ஆன்,ஹதீஸ் வசனங்கள் எழுதிப்போடக்கூடிய கரும்பலகையின் மீது SDPI யின் காட்டுமிராண்டி கும்பல் அவர்களது போஸ்டரை ஒட்டிச் சென்றுள்ளனனர்.
    கடந்த 16.02.11 அன்று ஆசாத்நகர் பள்ளிவாசலின் முன்பு மேள தாளத்துடன் டான்ஸ் ஆடி நபி(ஸல்) அவர்களின் பிறந்தநாளை கொண்டாடிய சுன்னத்(??)ஜமாத்தினறுக்கு பக்கபலமாக இருந்து உதவியது மட்டுமல்லாமல் TNTJ வை வம்புக்கு இழுத்து அதில் குளிர்காய நினைக்கும் கேடுகேட்ட கூட்டம் தான் SDPI .
    இஸ்லாமிய பிரச்சாரத்திற்கு முட்டுக்கட்டை போடும் இவர்களை சமூதாயம் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.

    கருத்துரையிடுக

    உங்கள் விமர்சனகள், இறைவனுக்கு உண்மையாய் இருக்கு வேண்டுகிறோம்

    Related Posts Plugin for WordPress, Blogger...
     
    Copyright (c) 2011 Designed byDezMatix
    Other Links : TNTJ NEWS PORTAL, Online PJ,