Related Posts Plugin for WordPress, Blogger...

Tamil Nadu Thowheed Jamaath - Seven Wells Branch Headline Animator

அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைத்து தானும் நல்ல அமல் செய்து தான் ஒரு முஸ்லிம் என்று கூறுபவனை விட அழகிய சொல்லுக்குரியவன் யார் ?

கல்வியை தொடரமுடியாமல் வசதியற்ற நிலையில் உள்ள மாணவ - மாணவிகளுக்கு உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள்

1. ஐக்கியப் பொருளாதாரப் பேரவை

அலி டவர்ஸ், கிரீம்ஸ் ரோடு

ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006

தொலைபேசி: 2829 5445

2. இஸ்லாமிக் டெவலப்மென்ட் பேங்க்

ராயபேட்டை, நெடுஞ்சாலை

சென்னை - 14

தொலைபேசி: 94440 52530

3. சீதக்காதி அறக்கட்டளை

688 , அண்ணா சாலை

சென்னை - 06

4. ஆல் இந்தியா இஸ்லாமிக் பவுண்டேசன்

688 , அண்ணா சாலை

சென்னை - 06

5. B S. அப்துல் ரஹ்மான் ஜகாத் பண்ட் பவுண்டேசன்

4 மூர்ஸ் ரோடு, சென்னை - 06

(ஜகாத்துக்கு உரியவர்களுக்கு மட்டும்)

6. சுலைமான் ஆலிம் சாரிடபிள் டிரஸ்ட்

ஜாவர் பிளாசா,

நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை

சென்னை - 34

7. முஹம்மது சதக் அறக்கட்டளை

133 , நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை

சென்னை - 34

8. மெஜெஸ்டிக் பவுண்டேசன்

117 ஜெனெரல் பேட்டர்ஸ் சாலை

சென்னை - 02

9. முஸ்லிம் பவுண்டேசன் டிரஸ்ட்

ஜபார்ஷா தெரு,

திருச்சி.

10. தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம்

118 / பி வேப்பேரி நெடுஞ்சாலை

சென்னை - 03

11. தமிழ்நாடு முஸ்லிம் பட்டதாரிகள் சங்க வெல்பர் டிரஸ்ட்

டி - பிளாக் 10 ( 23 )

11 வது தெரு

அண்ணா நகர் - சென்னை 40

போன் 98400 80564

12. அஸ்மா காசிம் அறக்கட்டளை

மாண்டியத் சாலை

எழும்பூர் - சென்னை – 08

13. ராஜகிரி பைத்துல்மால்

கீழத் தெரு

ராஜகிரி - 614 207

14. டாம்கோ

807 - அண்ணா சாலை

5 வது சாலை

சென்னை

15. ஹாஜி. அஹமது மீரான்

Managing Director

Professional Courier’s

22. மகாராஜா சூர்யா ராவ் ரோடு

ஆழ்வார்பேட்டை - சென்னை – 18

16. மியாசி

புதுக் கல்லூரி வளாகம்

பீட்டர்ஸ் ரோடு

சென்னை – 14

17. S I E T

கே.பி. தாசன் சாலை

தேனாம்பேட்டை

சென்னை - 18
Read More...

சென்னையில் ஜூலை 4-ந்தேதி 15 லட்சம் இஸ்லாமியர்கள் பங்கேற்கும் பேரணி- மாநாடு

சென்னை, ஜூன். 6-

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னையில் இன்று நடந்தது. நிறுவன தலைவர் ஜெய்னுல் ஆபிதீன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ஜெய்னுல் ஆபிதீன் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாடு முழுவதும் இஸ்லா மியர்கள் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளனர். 60 சதவீதத்துக்கும் மேற்பட்ட வர்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்கிறார்கள். இந்த மக்களின் கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதார நிலையை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரையை அமுல்படுத்த வேண்டும். இதன் மூலம் அனைத்து துறைகளிலும் இஸ்லாமியர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும்.

இதை வலியுறுத்தி ஒடுக்கப்பட்டோரின் உரிமைப்பேரணி மற்றும் மாநாடு சென்னை தீவுத்திடலில் அடுத்த மாதம் (ஜூலை) 4-ந்தேதி நடக்கிறது. இதில் மாநிலம் முழுவதிலும் இருந்து 15 லட்சம் பேர் குடும் பத்துடன் பங்கேற்கிறார்கள். இந்த மாநாட்டின் செயல் திட்டங்கள் குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது

மாநாட்டில் கலந்து கொள்பவர்களுக்கு வாகன நிறுத்துமிடங்கள் , தேவையான வசதிகள் செய்து கொடுப்பது பற்றி முடிவு செய்யப்பட்டுள் ளது. எங்களின் நியாயமான கோரிக்கைகள் வெற்றி பெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

இந்த மாநாட்டில் கலந்து கொள்ள சிறப்பு அழைப்பாளர்களாக அனைத்து கட்சியினரையும் அழைப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், மாநில தலைவர் பக்கீர் முகமது அல்தாபி, துணை தலைவர் ரகமத்துல்லா, பொதுச் செயலாளர் அப்துல் அமீது , பொருளாளர் சாதிக், செய லாளர் தவ்பீக், மாநாட்டு குழு தலைவர் சைபுல்லா ஹாஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
Read More...

10 ஆம் வகுப்பு பொது தேர்வில் தேர்சி பெறாதவர்களுக்கு (பெயில் ஆனவர்கள்) TNTJ மாணவர் அணி 2 வார இலவச சிறப்பு பயிற்சி (தங்கும் வசதி இலவசம்)

10 ஆம் வகுப்பு பொது தேர்வில் தேர்சி பெறாதவர்களுக்கு (பெயில் ஆனவர்கள) அரசு உடனடி தேர்வு நடத்துகின்றது. பெயிலான மாணவர்களை தேர்வில் தேர்சி பெறவைக்க TNTJ மாணவர் அணி இரண்டு வார சிறப்பு பயிற்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. தேர்வில் தோல்வியுற்ற மாணவர்கள் (பெயில் ஆனவர்கள்) இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திகொள்ளுங்கள். தகுதி மிக்க ஆசிரியர்களை கொண்டு பாடம் நடத்தபடும். இன்ஷா அல்லாஹ் பெயில் ஆனவர்கள் நிச்சயம் தேர்சி பெறுவதற்க்கு (பாஸ் ஆவதற்க்கு) ஆனா அனைத்து வழிமுறைகளுக்கும் பாடங்களும் நடத்தபடும்.

சென்னையில் நடக்கும் இந்த இலவச பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு தங்கும் வசதி இலவசமாக வழங்கபடும். கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் தவறாமல் "TNTJ மாவட்ட, கிளைகளின் பரிந்துரையோடு மதிப்பெண் சான்றிதலுடன் " சகோ.அஹமது இப்ராஹீமை (9841464521, 09243079532) தொடர்பு கொள்ளுங்கள். கடைசி தேதி ஜூன் 5.


S.சித்தீக்.M.Tech
TNTJ மாணவர் அணி
Read More...

10 -ஆம் வகுப்பி தேர்வு : மாநிலத்தில் முதலிடம் பிடித்த முஸ்லீம் மாணவி




இன்று 10 ஆம் வகுப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

நெல்லை அரசுப் பள்ளி மாணவி ஜாஸ்மின் 495 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடத்தை பெற்றுள்ளார். அலஹம்துலில்லாஹ். ஆரனியை சேர்ந்த நஸ்ரின் பாத்திமா 493 மதிப்பெண் எடுத்து மாநிலத்தில் 3-ஆம் இடம் பிடித்துள்ளார்.







ஏற்கனவே UPSC (IAS,IPS,IFS) தேர்வுகளில் பைஸ்ல் என்ற மாணவர் இந்திய அளவில் முதலிடம் பெற்றார் என்பது குறிப்பிடதக்கது. SSLC தேர்வில் 82.56 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.


மாணவர்கள் 79.4 சதவீதமும், மாணவிகள் 85.5 சதவீதமும் தேர்ச்சியடைந்துள்ளனர். இதன்மூலம் இந்த ஆண்டும் மாணவர்களைவிட மாணவிகளே அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்


4 பேர் இரண்டாம் இடம்:

செங்கல்பட்டைச் சேர்ந்த பிரியங்கா, கூடலூரைச் சேர்ந்த நிவேதா, புதுச்சேரியைச் சேர்ந்த தமிழரசன், கரூரைச் சேர்ந்த சிவப்பிரியா ஆகிய நான்கு பேரும் 494 மதிப்பெண்கள் எடுத்து 2வது இடத்தைப் பிடித்துள்ளனர்.


3வது இடம் பிடித்த 10 பேர்:

அதே போல மதுரை ஜெயமுருகன், நாகராஜன், புளியங்குடி ரம்யா, நெல்லை ஜெயலின், நாமக்கல் இந்துஜா, கரூர் ராஜ்சூர்யா, பரமக்குடி பிரதீப்குமார், திலகவதி, செய்யாறு செந்தில்குமார், புதுச்சேரி ரேவதி ஆகிய 10 பேரும் 493 மதிப்பெண்கள் எடுத்து 3வது இடத்தைப் பிடித்துள்ளனர்.


கணிதப் பாடத்தில் இந்த ஆண்டு 2,399 பேர் தான் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு கணிதத்தில் 5,112 பேர் முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

மெட்ரிக் தேர்வு - பவித்ரா முதலிடம்:

மெட்ரிக் தேர்வில் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த பவித்ரா 495 மதிப்பெண்களைப் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். சென்னை முகப்பேரைச் சேர்ந்த ஸ்ரீவந்தனா, பாண்டிச்சேரியைச் சேர்ந்த ஸ்ரேயா அகர்வால் ஆகியோர் 493 மதிப்பெண்களைப் பெற்று இரண்டாமிடத்தைப் பிடித்துள்ளனர்

Read More...
Related Posts Plugin for WordPress, Blogger...
 
Copyright (c) 2011 Designed byDezMatix
Other Links : TNTJ NEWS PORTAL, Online PJ,