Related Posts Plugin for WordPress, Blogger...

Tamil Nadu Thowheed Jamaath - Seven Wells Branch Headline Animator

அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைத்து தானும் நல்ல அமல் செய்து தான் ஒரு முஸ்லிம் என்று கூறுபவனை விட அழகிய சொல்லுக்குரியவன் யார் ?

10 -ஆம் வகுப்பி தேர்வு : மாநிலத்தில் முதலிடம் பிடித்த முஸ்லீம் மாணவி

Posted on
  • புதன், 26 மே, 2010
  • by
  • Admin
  • in



  • இன்று 10 ஆம் வகுப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

    நெல்லை அரசுப் பள்ளி மாணவி ஜாஸ்மின் 495 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடத்தை பெற்றுள்ளார். அலஹம்துலில்லாஹ். ஆரனியை சேர்ந்த நஸ்ரின் பாத்திமா 493 மதிப்பெண் எடுத்து மாநிலத்தில் 3-ஆம் இடம் பிடித்துள்ளார்.







    ஏற்கனவே UPSC (IAS,IPS,IFS) தேர்வுகளில் பைஸ்ல் என்ற மாணவர் இந்திய அளவில் முதலிடம் பெற்றார் என்பது குறிப்பிடதக்கது. SSLC தேர்வில் 82.56 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.


    மாணவர்கள் 79.4 சதவீதமும், மாணவிகள் 85.5 சதவீதமும் தேர்ச்சியடைந்துள்ளனர். இதன்மூலம் இந்த ஆண்டும் மாணவர்களைவிட மாணவிகளே அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்


    4 பேர் இரண்டாம் இடம்:

    செங்கல்பட்டைச் சேர்ந்த பிரியங்கா, கூடலூரைச் சேர்ந்த நிவேதா, புதுச்சேரியைச் சேர்ந்த தமிழரசன், கரூரைச் சேர்ந்த சிவப்பிரியா ஆகிய நான்கு பேரும் 494 மதிப்பெண்கள் எடுத்து 2வது இடத்தைப் பிடித்துள்ளனர்.


    3வது இடம் பிடித்த 10 பேர்:

    அதே போல மதுரை ஜெயமுருகன், நாகராஜன், புளியங்குடி ரம்யா, நெல்லை ஜெயலின், நாமக்கல் இந்துஜா, கரூர் ராஜ்சூர்யா, பரமக்குடி பிரதீப்குமார், திலகவதி, செய்யாறு செந்தில்குமார், புதுச்சேரி ரேவதி ஆகிய 10 பேரும் 493 மதிப்பெண்கள் எடுத்து 3வது இடத்தைப் பிடித்துள்ளனர்.


    கணிதப் பாடத்தில் இந்த ஆண்டு 2,399 பேர் தான் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு கணிதத்தில் 5,112 பேர் முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

    மெட்ரிக் தேர்வு - பவித்ரா முதலிடம்:

    மெட்ரிக் தேர்வில் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த பவித்ரா 495 மதிப்பெண்களைப் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். சென்னை முகப்பேரைச் சேர்ந்த ஸ்ரீவந்தனா, பாண்டிச்சேரியைச் சேர்ந்த ஸ்ரேயா அகர்வால் ஆகியோர் 493 மதிப்பெண்களைப் பெற்று இரண்டாமிடத்தைப் பிடித்துள்ளனர்

    0 கருத்துகள்:

    கருத்துரையிடுக

    உங்கள் விமர்சனகள், இறைவனுக்கு உண்மையாய் இருக்கு வேண்டுகிறோம்

    Related Posts Plugin for WordPress, Blogger...
     
    Copyright (c) 2011 Designed byDezMatix
    Other Links : TNTJ NEWS PORTAL, Online PJ,