Related Posts Plugin for WordPress, Blogger...

Tamil Nadu Thowheed Jamaath - Seven Wells Branch Headline Animator

அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைத்து தானும் நல்ல அமல் செய்து தான் ஒரு முஸ்லிம் என்று கூறுபவனை விட அழகிய சொல்லுக்குரியவன் யார் ?

" ஒடுக்கபட்டோரின் உரிமை மாநாடு "

முஸ்லிம்களின் கல்வி , வேலை வாய்ப்பு , அரசியல் , பொருளாதார நிலை எவ்வாறு உள்ளது என்பதை கண்டறிவதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா அவர்களின் அறிக்கை நாடாளுமன்றத்தில் 2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தாக்கல் செய்யப்பட்டது ... இந்த அறிக்கையில் முஸ்லிம்களின் அவல நிலை பற்றி நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா அவர்கள் ஆய்வு செய்து வெளியிட்ட சில முக்கிய தகவல்கள் ...
முஸ்லிம்களில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை படித்தவர்கள் சதவீதம் 65.31
5 முதல் 8 வரை படித்தவர்கள் 15.14 சதவீதம்
8 முதல் 10 வரை படித்தவர்கள் 10.96 சதவீதம்
10 முதல் 12 வரை படித்தவர்கள் 12 சதவீதம்
பட்ட படிப்பு படித்தவர்கள் 3 .6 சதவீதம் ( அதாவது 100௦ முஸ்லிம்களில் 3 பேர் மட்டுமே பட்ட படிப்பு படித்துள்ளனர்
பொருளாதாரத்தில் முஸ்லிம்களின் நிலை தலித் மக்களையும் மிஞ்சும் அளவுக்கு உள்ளது
முஸ்லிம் குடும்பங்களின் சராசரி மாத வருமானம் 1832 ரூபாய் 20 காசுகள்
ஒவ்வொரு 100 முஸ்லிம்களிலும் 31 பேர் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளனர் ( அதாவது சொந்தமாக இடம் இல்லாதவர்கள் , 2 ஆடைக்கும் குறைவாக உள்ளவர்கள் , ஒரு வேளை உணவு மட்டும் உண்பவர்கள் , படிப்பறிவு இல்லாதவர்கள் , கூலி வேலை செய்பவர்கள் , பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாதவர்கள் , நிலையான தங்குமிடம் இல்லாதவர்கள் )

இந்த அவல நிலையை மாற்றுவதற்காக நீதிபதி மிஸ்ரா அவர்கள் செய்த சில முக்கிய பரிந்துரைகள்

முஸ்லிம்களுக்கு நாடு முழுவதும் கல்வி , வேலை வாய்ப்பு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் நூற்றுக்கு பத்து என்ற கணக்கில் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்.
முஸ்லிம்களுக்கு சுயதொழில் தொடங்க வட்டியில்லா கடனுதவி வழங்க வேண்டும் .
பொருளாதாரத்தில் பின்தங்கிய முஸ்லிம்களுக்கு சமையல் காஸ் இணைப்பு குறைந்த விலையில் வழங்க வேண்டும் .
சொந்த வீடு இல்லாத ஏழை முஸ்லிம்களுக்கு இலவச வீடு கட்டி தர வேண்டும்.

இந்த கோரிக்கைகளை அமல்படுத்த வலியுறுத்தி ஜூலை 4 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தவிருக்கும் 15 லட்சம் முஸ்லிம்கள் பங்கேற்கக்கூடிய ஒடுக்கபட்டோரின் மாநாட்டில் பங்கேற்று நமது உரிமையை வென்றெடுப்போம் ...இன்ஷா அல்லாஹ்...
Read More...

மீலாது விழா Notice





Read More...

தர்ஹாக்களை தரைமட்டமாக்குங்கள்

ஏக இறைவனின் திருப்பெயரால்

தர்ஹாக்களை தரைமட்டமாக்குங்கள்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் "(தரையைவிட ) உயர்ந்துள்ள எந்தக் கப்ரையும் தரைமட்டமாக்காமல் விட்டு விடாதிர் "
(அறிவப்பவர் : அலி (ரலி) நூல் : முஸ்லீம் 1764 )

அல்ல்ஹாவின் தூதர் ஸல் அவர்கள் கப்ரை தரைமட்டமாக்கும்படி உத்தரவிட்டதை நான் கேட்டுள்ளேன்.
(அறிவப்பவர் : ஜாபிர் (ரலி) நூல் : முஸ்லீம் 1765)

மேற்கண்ட ஹதீஸ்களெல்லாம் "ரஹ்மத் அரகட்டளையின்" மூலம் வெளியிடப்பட்டு, சுன்னத் ஜமாஅத் மௌலவிகளால் மொழிபெயர்க்கப்ட்டு, கடையநல்லூர் பைஜூல் அன்வார் அரபி கல்லூரி முதல்வர் காஜா மொஹிதீன் அஸ்ஸலாமி, லால் பேட்டை மன்பசுல் உலூம் அரபிக்கலூரி துணை முதவர் நூருல் அமீன் மன்பயி, சென்னை காஷிபூல் ஹூதா அரபிகல்லூரி பேராசிரியர் இரஹீம் பாகவி , காசாமி இன்னும் பல உலமாக்கள் வழங்கி வெளியிடப்பட்டுள்ள ஸஹீஹ் முஸ்லீமின் தமிழ் மொழி பெயர்பிலுள்ள ஹதீஸ்கல் தான்.

சிந்தித்து பாருங்கள் ! சுன்னத் ஜமாஅத் மௌலவிகளே! கப்ருகளை கட்டகூடாது , கட்டப்பட்ட கப்ருகளை இடிக்க வேண்டும் , தர்கா கட்டகூடாது என நபி அவர்கள் கூறிய செய்திகளை மொழி பெயர் திருக்கிறார்கள். இதற்கு பிறகும் சாபம் இறங்கும் தர்ஹாக்கள் தேவையா ?

படைத்தவனை மறந்துவிட்டு யானைகளுக்குபின்னால் சினிமா பாடுகளுடன், ஆட்டம் பூட்டு கொண்டு ஆணுகளும், பெண்களும் கண்ணயரும், காளையரும், கலர்புல்லாக காட்சிதந்து ஒருவரை ஒருவர் கண்டுகளித்து இப்படி கூதடின்கின்ர மார்கத்தயா , நபி ஸல் அவர்கள் காடிதந்தார்கள் , தீநோறாய் சிந்திந்து பாருங்கள் .

நபி ஸல் அவர்கள் தாம் மரணிப்பதற்கு முனால் நோயிற்றிந்த பொது " யஹுதிகளையும், நாசராகளையும் அல்லாஹ் சபிப்பானாக அவர்கள் தங்கள் நபி மார்களின் மண்ணறைகளை வன்ன்கச்தளைகலாக ஆக்கஈவிட்டன்ர் என்று கூறினார்கள் .
(அறிவப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : புகாரி 1330)

நபி மார்களுக்கி தர்ஹா கட்ட்யவர்களுக்கு அல்ல்ஹவுடி சாபம் ஏற்பட்டு விட்டது என்றால் இன்றைக்கு ஏர்வாடி , நாகூர் , அஜ்மீர் போன்ற இடங்களில் வலிமார்கள் என்றபெயரில் மனிதகளுக்கும் , யானைகொல்லுக்கும் , கட்டைபீடி மச்தாங்களுக்கும் , தர்ஹாக்கள் கட்டி உள்ளீர்களே !! கந்தூரி கொண்டாடுகிறீர்களே இது யாருடைய கலாச்சராம் ? யஹூது நசாரக்களின் கலாச்சராம் அல்லவா ? இறைவனுடைய சாபத்தை அஞ்சி கொள்ளுங்கள் .

அல்லாஹுவுடைய பாதையில் கொள்ளபட்டவர்களிடம் (ஷஹீதுகள்) உதவி தேடுவது சாத்தியமா ?

அல்லாஹுவின் பாதையில் கொள்ளபட்டோரை இருந்தூர் என கூறாதீர்கள் ! மாறாக உய்ருடன் உள்ளனர் . எனினும் நீங்கள் உணரமாடீர்கள் (அல் குர்ஆன் - 2 :154 ), இறந்தவர்களை எண்ணாதீர்கள் (அல் குர்ஆன் - 3:169) ஆகிய வசனங்கள் கூறுவதை மூஸ்லீம்கள் தவறாக சிலர் புரிந்து அவர்களிடம் பிரார்த்திக்கலாம் என்பதிற்கு இவ்வசனகள் சான்றாக அமைந்துள்ளதாக அவர்கள் விளங்கி கொண்டுள்ளனர்,. இது பல காரங்களால் தவாறன விளக்கமாகும்

இவ்வசனகள் நல்லடியார்கள் மற்றும் மாகன்களை கொண்டாடவோ , அவர்களுக்கு வழிபாடு நடுதுவதை அனுமதிக்கவோ அருளப்படவில்லை . அல்லாஹ்வின் பாதியில் உயிர்த்தியாகம் செய்ய ஒருவர் தயங்ககூடாது என்பதை வலயுரித்தவே அருளப்பட்டன .
இவ்வசனகள் அருளபட்டபின் , நபிகள் நாயகம் ஸல் அவர்களோ , நபி தோழர்களோ அல்லாஹ்வின் பாதியில் கொல்லபட்டவர்களை அழைக்கவோ , பிறர்திக்கவோ இல்லை என்பதை முதலில் விளங்கி கொள்ள வேண்டும் .

இவ்வசனகளை கவனமாக ஆய்வு செய்தால் அவகளின் விளக்கம் தவறு என்பதை அவர்களே அறியலாம் . ௨.௧௫௪ அவது வசனத்தில் "அவர்கள் உயிருடன் உள்ளனர் " என்பதுடன் "எனினும் நீங்கள் உணரமாடீர்கள் " என்றும் கூறப்பட்டுள்ளது . அவர்கள் உயிருடன் இருபது நாம் உணர்துள்ள கருத்தில் அல்ல. நம்மால் உணர்ந்து கொள்ள்ளமுடியாத வேறு வகையில் உயிருடன் இருக்கிறார்கள் என்ற கருத்தை இது தரும் . ௩:௧௬௯ வசனமும் அதை தொடர்ந்து வரும் நான்கு வசனக்லூம், இதை இன்னும் தெளிவாக கூறிகின்றன . ௩:௧௬௩ வசனம் . " தம் இறைவினடம் உயிருடன் உள்ளனர் " என கூறிகிறது . நம்மை பொறுத்தவரை அவர்கள் மரணிதவிட்டலூம் , இறைவனை பொறுத்தவரை அவர்கள் உயிருடன் உள்ளனர் என்று கூறபடுகிறது . இவை அனைத்தையும் விட இவ்வசனத்திற்கு அல்லாஹ்வின் தூதர் அளித்த விளக்கம் முக்கியமானதாகும் .

உயிருடன் இருக்கிறார்கள் என்றால் எப்படி ? என்று நாங்கள் கேட்டபொழுது அவர்களின் உயிர்கள் பச்சை நிறத்து பறவை கூடுக்குள் இருக்கும் அவை சொர்கத்தில் விருபியவாறு சுற்றி திரியும்என்று நபி ஸல் அவர்கள் விளக்கம் அளித்தார்கள்
(அறிவப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி) நூல் : புகாரி 3500)

நியாயத் தீர்பிர்க்கு பிறகு தான் நல்லோர்கள் சொர்க்கம் செல்வார்கள் எனவே தன் மனித வடிவில் இல்லமால் பச்சை நிறப் பறவைகளாக சுற்றி வருவார்கள் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்

அல்லாஹுவின் பாதையில் கொல்லப்பட்டவரின் சொத்திக்களை வாரிசுகள் எடுத்து கொல்லாலமா ? அவரது மனைவி மற்றவரை மணந்து கொள்ளலாமா ? கேட்டால் செய்யலாம் என்று தான் தர்ஹாவிற்கு செல்லகூடியவர்களும் , தர்ஹாவ ஆதரிப்பவர்களும் பதிலளிப்பார்கள் . அவர்கள் நம்மை பொறுத்தவரை இறந்துவிட்டார்கள் என்று இவர்களும் ஒப்பு கொல்வடஹி இதில் இருந்து அறியலாம் .
நம்மை போலவே உயிருடன் உள்ளனர் என்று ஒரு வாதற்றிக்கு வைத்து கொள்வோம் . ஒருவர் உயிருடன் இருப்பதால் அவரிடம் பிரார்த்திக்கலாமா ? அவருக்கு கடவுள் தனமி வந்து விடுமா ? நாம் ந்யிருடன் தான் இருக்கிறோம். நம்மில் ஒருவர் மற்றொருவரிடம் பிரார்த்தனை செய்யலாமா ?

ஈஸா நபி அலை அவர்கள் இன்று வரை உயிருடன் தான் உள்ளனர் என்று பல இடங்களில் அல்லாஹ் கூறிகிறான் (பார்க்கஅல் குர்ஆன் : 4 :157 முதல் 159 வரை , 5 :75 , 43 : 61 )

ஈஸா நபி அலை அவர்கள் இவ்வுலகில் ஏராளமான அற்புதங்களை நிகழ்த்தினார்கள் , அவர்களை அழைத்து பிரார்த்தித்தும் கிருஸ்துவர்கள் நடவடிக்கை தவறானது என்று நம்புகின்ற முஸ்லிம்கள் ஈஸா நபிக்கு சமாமாக இல்லாதவர்களிடம் பிரார்த்திப்பது எந்த வகையில் நியாயமாகும்

அனைத்தையும் படைத்தது பரிபாலித்து , அனைத்திற்கும் ஆற்றல் உள்ளவநிடம்தான் பிரார்த்திக்க வேண்டும், உயிருடன் இருப்பதால் மட்டும் ஒருவரிடம் பிரார்த்திக்க முடியாது . அல்லாஹுவின் பாதையில் ஒருவர் கொள்ளபடரா ? அல்லது பெருமைக்காக போருக்கு சென்று கொள்ளபட்டாரா என்பது அல்லாஹ்விற்கு மட்டுமே தெரிந்த விஷயம் . ஒருவர் அல்லாஹுவின் பாதையில் தான் கொல்லபட்டாரா என்பது நாம் முடிவு செய்ய இயலாது . இதும் கவனத்தில் கொள்ளவேண்டும் . இவை தவிர அல்லாஹ்வை தவிர யாரிடமும் பிரார்த்தனை செய்ய செய்யகூடாது என்று கூறும் நூறுக்கணக்கான இறை வசனங்கள் உள்ளன அவற்றில் சில
(3.186,3.38,2.29,7.55,7.56,7.180,7.194,7.197,10.12,10.106,13.14,14.39,14.40,16.20,17.56,17.110,19.4,2190,22.12,2213,22.62,22.73,22.117,22.62,31.30,35.13,35.14,35.40,39.38,40.12,40.20,40.60,40.66,46.4,46.5) போன்ற வசனங்கள் அல்லாஹ்வை தவிர வேறு யாரிடமும் பிரார்த்திக்க அதிகாராம் இல்லை என்று கூறுவதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

தர்ஹாவில் அடக்கம் செய்யப்பட்டவர்கள் அல்லாஹிவ்டம் (சிபாரிசு ) பரிந்துரை செய்வார்களா ?

அல்லஹ்வை அன்றி அவரகளுக்கு தீமையையும் , நன்மையையும் செய்யதவற்றை வணங்குகின்றனர் . அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்கு பரிதுரை செய்வார்கள் என்றும் கூறுகின்றனர் . வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வுக்கு தெரியாததை அவனுக்கு சொல்லிகொடுகிரீர்களா ? அவன் தூயவன்அவன்ர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்தவன் " என்று கூறுவீராக (அல்குர்ஆன் 10 .18 )

மேற்கூறிய வசனம் " தர்ஹவில் அடக்கம் செய்யப்பட்டு இருப்பவர்கள் வலிமார்கள் என்று சொல்லபடுபவர்கள், அல்லாஹ்விடம் எந்த பரிந்துரையும் செய்ய முடியாது என்பதை பிரகடனப்படுத்துகிறது

இறுதி எச்சரிக்கை

(நரக நெருப்பில் ) அவர்களுடைய முகங்கள் புரட்டப்டும் அந்நாளில் (மறுமையில் ) ஆ !! கை சேதமே !! அல்லாஹ்வுக்கே நாங்கள் வழிபட்டு இருக்க வேண்டுமே !! இதுதருக்கும் நாங்கள் கட்டு பட்டு இருக்க வேண்டுமே என்று கூறுவார்கள் . எங்கள் இறைவா !! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும் , எங்கள் பெரியவர்களுக்கும் வழிப்பட்டோம் அவர்கள் எங்களை வலிகேடுத்துவேட்டார்கள் என்று அவர்கள் கூறுவார்கள் (அல்குர்ஆன் 3 .66 ,67 )

அல்லாஹுவுக்கும் அல்லாஹ்வுடைய தூதருக்கும், மாற்றமாக தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக மார்க்கத்தை மறைத்து , பிழைப்பு நடதுவர்களின் பேச்சை கேட்டு வழி கெடுபவர்கள் புலம்பும் புலம்பளைதான் அல்லாஹு திரு மறையில் அல்குர்ஆனில் கூரிகாட்டுகிறான் . இப்படி புலம்பும் மக்களாக அல்லாஹ் நம்மை ஆக்கதிருக்க அல்லாஹ்விடம் மட்டும் நாம் பிரார்த்தனை செய்வோம்
Read More...

ஆன்மீக உண்மையை உணர்த்தியது யார்? நித்தியானந்தாவா? காதர் மொய்தீனா?

காதர் மொய்தீன் அவர்கள், சாமியார்களை தேடிச் சென்றது சத்திய இஸ்லாத்தை போதிக்கத்தான் என்று தவறாக எண்ணிக் கொண்டு அவர் மீது தாங்கள் வைத்துள்ள குருட்டு பக்தியின் காரணமாக சில கேள்விகளை நம் இணையதளத்திற்கு அனுப்பினர். அதற்கு அபு அஹ்சன் அளித்த பதில் இதோ:

அவர்களுக்கு பதில் கூறுவதுடன் காதர் மொய்தீன் அவர்களின் மற்ற சில இஸ்லாமிய அடிப்படை கொள்கைளை குழி தோண்டி புதைக்கும் புகைப்படங்களையும் வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறோம்.

அப்பாவிகளின் கேள்வி : பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் இந்து மத சாமியார்கள் மத்தியில் மட்டு மல்லாது கிறிஸ்தவ மற்றும் பல மத அறிஞர்கள், ஏன் நாத்திகர்கள் மத்தியிலும்ஆன்மீகத்தின் உண்மை நிலையை உணர்த்தி அழகிய முறையில் அழைப்புப் பணி செய்து வருகிறார்.

பதில் : காதர் மொய்தீன் சத்திய இஸ்லாத்தை போதித்த லட்சனத்தை கீழ்காணும் புகைப்படத்தை பார்க்கும்போதே தெரிகிறது (தேதி இடம் உடன் இருப்பவர்கள் அனைத்து விபரமும் புகைப்படத்தின் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது)


தனக்கு சிலை வைத்து கும்பிடச் சொல்லி இறை மறுப்புக் கொள்கையை போதிக்கும் நித்யானந்தா (போலி ஆன்மீகம்) வின் உரைகள் அடங்கிய டி.வி.டி யை வெளியிடுகிறார் காதர் மொய்தீன்.

சத்தியத்தை போதிக்கச் சென்றவர்? அசத்தியத்தை பல் இழித்து வாங்கி வந்திருக்கிறார் இது தான் இஸ்லாத்தை பொதிக்கும் லட்சனமா?

அருகிலேயே ஜட்டி போட்ட சாமியாரின் வெட்கம் கெட்ட தோற்றத்தை கையாளோ , நாவாலோ தடுக்காமல் மனதாலும் வெறுக்காமாலும் வெட்க உணர்வு இல்லாமலும் ஜட்டி போட்ட ஆசாமியின் பக்கத்தில் நின்று கொண்டிருக்கிறார். இதில் இஸ்லாமிய போதனைகள் எங்கே இருக்கின்றது.தேடித் தாருங்கள்.

காதர் மொய்தீன் வெளியிடும் டிவிடியை ஒருவர் வாங்கி கேட்டு அதன் படி நடந்தால் அவர் மறுமையில் சுவனம் செல்வாரா நரகம் செல்வாரா? முஸ்லிம்கள் நரகத்திற்கு சென்று நாசமாகி போனாலும் பராவயில்லை தனக்கு பதவிதான் முக்கியம் என இது போன் காரியத்தை செய்யும் காதர் மொய்தினா முஸ்லிம் சமுதாயத்தின் காவலரா?

இவரா இஸ்லாத்தை போதிக்கின்றவர்? இவரா முஸ்லிம்களை வெற்றியின் பால் அழைத்துச் செல்பவர்? இதையும் ஒருவர் நியாப்படுத்துகின்றார் என்றால் அவரையும் எந்த லிஸ்டில் சேர்ப்பது என்று தெரியவில்லை!

நாத்திகர்கள் மத்தியிலும் ஆன்மீகத்தின் உண்மை நிலையை உணர்த்தி அழகிய முறையில் அழைப்புப் பணி செய்து வருகிறார்

என்று கூறும் இவர்கள் காதர் மொயதீன் அவர்கள் நாத்திகத்தை சார்ந்த தற்போதைய முதல்வர் கருணாநிதி அவர்களிடம் இஸ்லாத்தை போதித்த லட்சனத்தை மறந்து விட்டார்களா?

சென்ற ஆறு வருடம் முன்பு கருணாநிதி தலைமைல் நடைபெற்ற IUML பொது குழவில் நமது அமீரே மில்லத்? (காதர் மொய்தீன்) அவர்கள் ‘அல்லாஹும்ம நூர்ஹுச்சமவாதி வல் அரச’ என்ற திருக்குர்ஆனின் வசனத்திற்கு கடந்த 40 ஆண்டுகளாக திருக்குர்ஆனை நான் ஆராய்ச்சி செய்கிறேன். அனால் அதற்கான விளக்கத்தை என்னால் தமிழில் தர இயல வில்லை.

நான் மட்டுமல்ல. பெரிய பெரிய மௌலானாக்களாலும் அதற்கான விளக்கத்தை தர முடிய வில்லை. அனால் மொளானாவுக்கெல்லாம் மொளானாவாகிய நடமாடும் அவுலியா கலைஞர் அவர்கள் தன்னுடைய முரசொலி பத்திரிகையில் தெள்ளத் தெளிவாக இதற்கான விளக்கத்தை தந்துள்ளார்.

எனவே இவரை நான் என்னடைய ஆன்மீக தலைவராக ஏற்றுக் கொள்கிறேன் எனக் கூறி, ஓரிறைக் கொள்கை மார்க்கத்தில் இருக்குப்பவர் இவர் கடவுள் மறுப்பாளரை தனது ஆன்மீக அதாவது இஸ்லாமிய குறுவாக ஏற்றுக் கொண்டுள்ளாராம்.

இம்மாதிரியான நிறம் மாறும் சிம்மாசன ஆசை கொண்ட தலைவர்கள் தான் ஆன்மீகத்தை 40, 50 ஆண்டுகளாக மாற்று மதத்தவருக்கு உணர்த்துகிறார்கள? அல்லது இவர்களிடம் சென்று இணைவைப்பு கொள்கையின்படி இஸ்லாத்தையும், இஸ்லாமியர்களையும் கொசைப்படுத்துகிரார்களா?

ஆசி வாங்கும் காதர் மொய்தீன்




சக்தி அம்மா காதர் மொய்தீனுக்கு ஆசி வழங்குகிறார். சன்மார்க்க மேதை? காலில் விழுந்து ஆசி பெற்றார். சத்தியத்தை போதிக்கச் சென்றவர் யார்? அசத்தியத்தை கைகூப்பி வணங்கியவர் யார்?.

இதில் இஸ்லாமிய போதனைகள் எங்கே இருக்கின்றது.தேடித் தாருங்கள்.

குனியும் போது எடுக்கப்பட்டது நிமிரும் போது எடுக்கப்பட்டது படுக்கும் போது எடுக்கப்பட்டது ஆசி வாங்க வில்லை ஊசி வாங்கவில்லை என்று கூறி இதை முட்டுக்கட்டுபவர்கள் இந்த செய்தியை வெளியிட்ட தினமலர் பத்திரிக்கையின் மீது வளக்கு தொடர்ந்தார்களா அல்லது மறுப்பாவது வெளியிட வைத்தார்களா? இதுவரை இல்லை! முதலில் அதைச் செய்யட்டும்!

இஸ்லாத்தை கொள்கையை குழி தொண்டி புதைக்கும் காதர் மொய்தீன்



வேலூரில் ஹிந்து முன்னணியினர் வந்தே மாதரம் பாடலை அனைவரும் கட்டாயமாக பாட வேண்டும் என்பதை வழியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர் .

வேலூர் காதர் மொகிதீன் அழையா விருந்தாளியாக அந்த பாசிச பயங்கர வாதிகள் நடத்திய ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு மைக் பிடித்து ‘சில தீய சக்திகள் வந்தே பாடலை எதிர்கின்றனர். அனால் முஸ்லிம்கள் அனைவரும் இதனை பாட வேண்டும்’ எனக்கூறிஹிந்துக்களுக்கு அவர்களின் ஆன்மிகத்தை சரியாக உணர்த்தி உள்ளார்.

இந்தியாவிலுள்ள முஸ்லிம்கள் அனைவரும் ஒருமனதாக ஏகத்துவ கொள்கைக்கு வேட்டு வைக்கும் இந்த வந்தே மாதரம் பாடலை எதிர்க்கும்போது கல்லையும் மண்ணையும் வணங்க வேண்டும் என்ற ஹிந்துக்களின் ஆன்மீகத்தை இவர் உணர்த்தினாரே தவிர இஸ்லாமிய மார்க்கத்தை அல்ல!

இஸ்லாத்தின் அடிப்படை கொள்கையினையும் இந்திய முஸ்லிம்களின் வந்தே மாதிர பாடலின் எதிர்ப்பினையும் கொச்சைபடுத்தினார்.


மாலையும் மொய்தீனும்



மாலை போட்ட மாமேதை இங்கே சத்திய இஸ்லாத்தை எந்த விதத்தில் போதிக்கிறார்? அனைவருக்கும் ஒரு மாலை தனக்கு மட்டும் இரண்டு மாலைகள். இதில் இஸ்லாமிய பிரச்சாரம் எங்கே? தேடித்தாருங்கள்.

காயிதே மி்ல்லத் கல்லரையும் காதர் மொய்தீனும்




மறைந்த காயிதே மில்லத் கல்லரையில் 114 – வது பிறந்த நாள் கொண்டாடும் இஸ்லாம் காட்டித்தராத பகுத்தறிவற்ற இச்செயல் அரங்கேற்றம் ஆகும் இடத்திற்கு காதர் மொய்தீன் சென்றது ஏன்?

ஊரெல்லாம் இஸ்லாத்தை சொல்வதற்கு செல்லும் இந்த மேதை(?), உயர்த்தப்பட்ட கப்ருகளை தரைமட்டமாக்காமல் விடக்கூடாது மேலும் அதில் கட்டுவதோ பூசுவதோ கூடாது என்ற நபிகளாரின் போதனைக்கு செயல்வடிவம் கொடுக்காதது ஏன்?

இவை அனைத்தும் உணர்த்துவது என்னவென்றால்…காதர் மொய்தீன் அவர்கள் அரசியல் பதிவிகளுக்காக இஸ்லாமிய கொள்கைகளை குழி தொண்டி புதைக்கும் செயலையும் செய்யத் தயங்கமாட்டார் என்பதே நிதர்சன உண்மையாகிறது.

சாமியார்களை சந்திப்பது தவறா? அதற்கு குர்ஆன் ஹதீஸில் ஆதாரம் உள்ளதா?

என்று கேட்கும் இவர்களுக்கு நாம் கூறிக்கொள்வது என்னவென்றால், சாமியார்கள் மற்றும் பாதிரியார்கள் அரசியல் தலைவர்களை சந்தித்து உண்மை இஸ்லாத்தை எடுத்துச்சொல்வதில் தவறில்லை.

இஸ்லாத்தை பொதிக்கின்றேன் என்ற பெயரில் பதவி ஆசைக்கும் விளம்பர மோகத்திற்கும் அடிமையாகி சாமியார்களிடம் ஆசி வாங்குவது அவர்களின், டிவிடியை வெளியிடுவது, அவர்களது கூட்டங்களில் இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளை தகர்ந்தெரியும் அளவில் பேசுவது மிகப்பெரும் இது போன்ற காரியங்கள் மிகப்பெரும் தவறாகும்.

இறைவன் திருமறையில்…

அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர் களுடன் அமராதீர்கள்! (அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர்களே என்று இவ்வேதத்தில் உங்களுக்கு அவன் அருளியுள்ளான். நயவஞ்சகர்களையும் (தன்னை) மறுப்போர் அனைவரையும் நரகில் அல்லாஹ் ஒன்று சேர்ப்பான். அல்குர்ஆன் 4-140

இது போன்று பல தவறான காரியங்களை செய்துவிட்டு மக்களிடம் பெரிய விமர்சனமாக வெடித்துக் கிளம்பும் போது சாமியாரிடம் சென்று ஆசி வாங்கவில்லை . பாசி வாங்கவில்லை என்று சப்பை கட்டுவோர் காதர் மொய்தீனின் செயலால் எழுந்துள்ள கேள்விகளுக்கு குர்ஆன் ஹதீஸிலிருந்து பதில் கூறட்டும்.

அசத்தியத்தை டிவிடி யாக பல் இழித்து வெளியிட்டதற்கு ஆதாரம்? ஜட்டி போட்ட சாமியாருக்கு அருகில் நின்றதற்கு ஆதாரம்? சக்தி அம்மாவிடம் ஆசி வாங்கியதற்கு ஆதாரம்? சபையில் இரண்டும் மாலைகளுடன் அமர்ந்திருப்பதற்கு ஆதாரம்? கல்லறைக்கு பிறந்தநாள் விழா கொண்டாடியதற்கு ஆதாரம்? வந்தே மாதரத்தை ஆமோதித்து ஹிந்துத்துவாவினரை ஊக்குவித்ததற்கு ஆதாரம்? வந்தே மாதரம் பாடலை முஸ்லிம்களை பாடச் சொன்னதற்கு ஆதாரம்?

இன்னும் புகைப்படங்களில் மறைந்திருக்கும் பல்வேறு கேள்விகளுக்கும் அவர்களிடம் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் பதில் உண்டா?

-அபு அஹ்சன்


Read More...

சென்னை ஏழுகிணறில் நடைபெற்ற இரத்த தான முகாம்!




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஏழுகிணறு கிளை மற்றும் ஆர்.எஸ்.ஆர்.எம் மகப்பேரு மருத்துவமணை இனைந்து கடந்த 26-7-2009 அன்று மாபெரும் இரத்த தான முகாம் நடத்தியது. இம்முகாமிற்கு மாநிலச் செயலாளர் அப்துல் ஜப்பார் மற்றும் வட சென்னை மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். சுமார் 100 நபர்கள் இம்முகாமில் இரத்த தானம் செய்தனர்.
Read More...
Related Posts Plugin for WordPress, Blogger...
 
Copyright (c) 2011 Designed byDezMatix
Other Links : TNTJ NEWS PORTAL, Online PJ,