அவர்களுக்கு பதில் கூறுவதுடன் காதர் மொய்தீன் அவர்களின் மற்ற சில இஸ்லாமிய அடிப்படை கொள்கைளை குழி தோண்டி புதைக்கும் புகைப்படங்களையும் வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறோம்.
அப்பாவிகளின் கேள்வி : பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் இந்து மத சாமியார்கள் மத்தியில் மட்டு மல்லாது கிறிஸ்தவ மற்றும் பல மத அறிஞர்கள், ஏன் நாத்திகர்கள் மத்தியிலும்ஆன்மீகத்தின் உண்மை நிலையை உணர்த்தி அழகிய முறையில் அழைப்புப் பணி செய்து வருகிறார்.
பதில் : காதர் மொய்தீன் சத்திய இஸ்லாத்தை போதித்த லட்சனத்தை கீழ்காணும் புகைப்படத்தை பார்க்கும்போதே தெரிகிறது (தேதி இடம் உடன் இருப்பவர்கள் அனைத்து விபரமும் புகைப்படத்தின் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது)
தனக்கு சிலை வைத்து கும்பிடச் சொல்லி இறை மறுப்புக் கொள்கையை போதிக்கும் நித்யானந்தா (போலி ஆன்மீகம்) வின் உரைகள் அடங்கிய டி.வி.டி யை வெளியிடுகிறார் காதர் மொய்தீன்.
சத்தியத்தை போதிக்கச் சென்றவர்? அசத்தியத்தை பல் இழித்து வாங்கி வந்திருக்கிறார் இது தான் இஸ்லாத்தை பொதிக்கும் லட்சனமா?
அருகிலேயே ஜட்டி போட்ட சாமியாரின் வெட்கம் கெட்ட தோற்றத்தை கையாளோ , நாவாலோ தடுக்காமல் மனதாலும் வெறுக்காமாலும் வெட்க உணர்வு இல்லாமலும் ஜட்டி போட்ட ஆசாமியின் பக்கத்தில் நின்று கொண்டிருக்கிறார். இதில் இஸ்லாமிய போதனைகள் எங்கே இருக்கின்றது.தேடித் தாருங்கள்.
காதர் மொய்தீன் வெளியிடும் டிவிடியை ஒருவர் வாங்கி கேட்டு அதன் படி நடந்தால் அவர் மறுமையில் சுவனம் செல்வாரா நரகம் செல்வாரா? முஸ்லிம்கள் நரகத்திற்கு சென்று நாசமாகி போனாலும் பராவயில்லை தனக்கு பதவிதான் முக்கியம் என இது போன் காரியத்தை செய்யும் காதர் மொய்தினா முஸ்லிம் சமுதாயத்தின் காவலரா?
இவரா இஸ்லாத்தை போதிக்கின்றவர்? இவரா முஸ்லிம்களை வெற்றியின் பால் அழைத்துச் செல்பவர்? இதையும் ஒருவர் நியாப்படுத்துகின்றார் என்றால் அவரையும் எந்த லிஸ்டில் சேர்ப்பது என்று தெரியவில்லை!
நாத்திகர்கள் மத்தியிலும் ஆன்மீகத்தின் உண்மை நிலையை உணர்த்தி அழகிய முறையில் அழைப்புப் பணி செய்து வருகிறார்
என்று கூறும் இவர்கள் காதர் மொயதீன் அவர்கள் நாத்திகத்தை சார்ந்த தற்போதைய முதல்வர் கருணாநிதி அவர்களிடம் இஸ்லாத்தை போதித்த லட்சனத்தை மறந்து விட்டார்களா?
சென்ற ஆறு வருடம் முன்பு கருணாநிதி தலைமைல் நடைபெற்ற IUML பொது குழவில் நமது அமீரே மில்லத்? (காதர் மொய்தீன்) அவர்கள் ‘அல்லாஹும்ம நூர்ஹுச்சமவாதி வல் அரச’ என்ற திருக்குர்ஆனின் வசனத்திற்கு கடந்த 40 ஆண்டுகளாக திருக்குர்ஆனை நான் ஆராய்ச்சி செய்கிறேன். அனால் அதற்கான விளக்கத்தை என்னால் தமிழில் தர இயல வில்லை.
நான் மட்டுமல்ல. பெரிய பெரிய மௌலானாக்களாலும் அதற்கான விளக்கத்தை தர முடிய வில்லை. அனால் மொளானாவுக்கெல்லாம் மொளானாவாகிய நடமாடும் அவுலியா கலைஞர் அவர்கள் தன்னுடைய முரசொலி பத்திரிகையில் தெள்ளத் தெளிவாக இதற்கான விளக்கத்தை தந்துள்ளார்.
எனவே இவரை நான் என்னடைய ஆன்மீக தலைவராக ஏற்றுக் கொள்கிறேன் எனக் கூறி, ஓரிறைக் கொள்கை மார்க்கத்தில் இருக்குப்பவர் இவர் கடவுள் மறுப்பாளரை தனது ஆன்மீக அதாவது இஸ்லாமிய குறுவாக ஏற்றுக் கொண்டுள்ளாராம்.
இம்மாதிரியான நிறம் மாறும் சிம்மாசன ஆசை கொண்ட தலைவர்கள் தான் ஆன்மீகத்தை 40, 50 ஆண்டுகளாக மாற்று மதத்தவருக்கு உணர்த்துகிறார்கள? அல்லது இவர்களிடம் சென்று இணைவைப்பு கொள்கையின்படி இஸ்லாத்தையும், இஸ்லாமியர்களையும் கொசைப்படுத்துகிரார்களா?
ஆசி வாங்கும் காதர் மொய்தீன்
சக்தி அம்மா காதர் மொய்தீனுக்கு ஆசி வழங்குகிறார். சன்மார்க்க மேதை? காலில் விழுந்து ஆசி பெற்றார். சத்தியத்தை போதிக்கச் சென்றவர் யார்? அசத்தியத்தை கைகூப்பி வணங்கியவர் யார்?.
இதில் இஸ்லாமிய போதனைகள் எங்கே இருக்கின்றது.தேடித் தாருங்கள்.
குனியும் போது எடுக்கப்பட்டது நிமிரும் போது எடுக்கப்பட்டது படுக்கும் போது எடுக்கப்பட்டது ஆசி வாங்க வில்லை ஊசி வாங்கவில்லை என்று கூறி இதை முட்டுக்கட்டுபவர்கள் இந்த செய்தியை வெளியிட்ட தினமலர் பத்திரிக்கையின் மீது வளக்கு தொடர்ந்தார்களா அல்லது மறுப்பாவது வெளியிட வைத்தார்களா? இதுவரை இல்லை! முதலில் அதைச் செய்யட்டும்!
இஸ்லாத்தை கொள்கையை குழி தொண்டி புதைக்கும் காதர் மொய்தீன்
வேலூரில் ஹிந்து முன்னணியினர் வந்தே மாதரம் பாடலை அனைவரும் கட்டாயமாக பாட வேண்டும் என்பதை வழியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர் .
வேலூர் காதர் மொகிதீன் அழையா விருந்தாளியாக அந்த பாசிச பயங்கர வாதிகள் நடத்திய ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு மைக் பிடித்து ‘சில தீய சக்திகள் வந்தே பாடலை எதிர்கின்றனர். அனால் முஸ்லிம்கள் அனைவரும் இதனை பாட வேண்டும்’ எனக்கூறிஹிந்துக்களுக்கு அவர்களின் ஆன்மிகத்தை சரியாக உணர்த்தி உள்ளார்.
இந்தியாவிலுள்ள முஸ்லிம்கள் அனைவரும் ஒருமனதாக ஏகத்துவ கொள்கைக்கு வேட்டு வைக்கும் இந்த வந்தே மாதரம் பாடலை எதிர்க்கும்போது கல்லையும் மண்ணையும் வணங்க வேண்டும் என்ற ஹிந்துக்களின் ஆன்மீகத்தை இவர் உணர்த்தினாரே தவிர இஸ்லாமிய மார்க்கத்தை அல்ல!
இஸ்லாத்தின் அடிப்படை கொள்கையினையும் இந்திய முஸ்லிம்களின் வந்தே மாதிர பாடலின் எதிர்ப்பினையும் கொச்சைபடுத்தினார்.
மாலையும் மொய்தீனும்
மாலை போட்ட மாமேதை இங்கே சத்திய இஸ்லாத்தை எந்த விதத்தில் போதிக்கிறார்? அனைவருக்கும் ஒரு மாலை தனக்கு மட்டும் இரண்டு மாலைகள். இதில் இஸ்லாமிய பிரச்சாரம் எங்கே? தேடித்தாருங்கள்.
காயிதே மி்ல்லத் கல்லரையும் காதர் மொய்தீனும்
மறைந்த காயிதே மில்லத் கல்லரையில் 114 – வது பிறந்த நாள் கொண்டாடும் இஸ்லாம் காட்டித்தராத பகுத்தறிவற்ற இச்செயல் அரங்கேற்றம் ஆகும் இடத்திற்கு காதர் மொய்தீன் சென்றது ஏன்?
ஊரெல்லாம் இஸ்லாத்தை சொல்வதற்கு செல்லும் இந்த மேதை(?), உயர்த்தப்பட்ட கப்ருகளை தரைமட்டமாக்காமல் விடக்கூடாது மேலும் அதில் கட்டுவதோ பூசுவதோ கூடாது என்ற நபிகளாரின் போதனைக்கு செயல்வடிவம் கொடுக்காதது ஏன்?
இவை அனைத்தும் உணர்த்துவது என்னவென்றால்…காதர் மொய்தீன் அவர்கள் அரசியல் பதிவிகளுக்காக இஸ்லாமிய கொள்கைகளை குழி தொண்டி புதைக்கும் செயலையும் செய்யத் தயங்கமாட்டார் என்பதே நிதர்சன உண்மையாகிறது.
சாமியார்களை சந்திப்பது தவறா? அதற்கு குர்ஆன் ஹதீஸில் ஆதாரம் உள்ளதா?
என்று கேட்கும் இவர்களுக்கு நாம் கூறிக்கொள்வது என்னவென்றால், சாமியார்கள் மற்றும் பாதிரியார்கள் அரசியல் தலைவர்களை சந்தித்து உண்மை இஸ்லாத்தை எடுத்துச்சொல்வதில் தவறில்லை.
இஸ்லாத்தை பொதிக்கின்றேன் என்ற பெயரில் பதவி ஆசைக்கும் விளம்பர மோகத்திற்கும் அடிமையாகி சாமியார்களிடம் ஆசி வாங்குவது அவர்களின், டிவிடியை வெளியிடுவது, அவர்களது கூட்டங்களில் இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளை தகர்ந்தெரியும் அளவில் பேசுவது மிகப்பெரும் இது போன்ற காரியங்கள் மிகப்பெரும் தவறாகும்.
இறைவன் திருமறையில்…
அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர் களுடன் அமராதீர்கள்! (அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர்களே என்று இவ்வேதத்தில் உங்களுக்கு அவன் அருளியுள்ளான். நயவஞ்சகர்களையும் (தன்னை) மறுப்போர் அனைவரையும் நரகில் அல்லாஹ் ஒன்று சேர்ப்பான். அல்குர்ஆன் 4-140
இது போன்று பல தவறான காரியங்களை செய்துவிட்டு மக்களிடம் பெரிய விமர்சனமாக வெடித்துக் கிளம்பும் போது சாமியாரிடம் சென்று ஆசி வாங்கவில்லை . பாசி வாங்கவில்லை என்று சப்பை கட்டுவோர் காதர் மொய்தீனின் செயலால் எழுந்துள்ள கேள்விகளுக்கு குர்ஆன் ஹதீஸிலிருந்து பதில் கூறட்டும்.
அசத்தியத்தை டிவிடி யாக பல் இழித்து வெளியிட்டதற்கு ஆதாரம்? ஜட்டி போட்ட சாமியாருக்கு அருகில் நின்றதற்கு ஆதாரம்? சக்தி அம்மாவிடம் ஆசி வாங்கியதற்கு ஆதாரம்? சபையில் இரண்டும் மாலைகளுடன் அமர்ந்திருப்பதற்கு ஆதாரம்? கல்லறைக்கு பிறந்தநாள் விழா கொண்டாடியதற்கு ஆதாரம்? வந்தே மாதரத்தை ஆமோதித்து ஹிந்துத்துவாவினரை ஊக்குவித்ததற்கு ஆதாரம்? வந்தே மாதரம் பாடலை முஸ்லிம்களை பாடச் சொன்னதற்கு ஆதாரம்?
இன்னும் புகைப்படங்களில் மறைந்திருக்கும் பல்வேறு கேள்விகளுக்கும் அவர்களிடம் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் பதில் உண்டா?
-அபு அஹ்சன்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
உங்கள் விமர்சனகள், இறைவனுக்கு உண்மையாய் இருக்கு வேண்டுகிறோம்