ஏற்கனவே திறந்த ஐந்து அறைகளில் கண்டெடுக்கப்பட்டுள்ள கோடிக்கணக்கான ஆபரணங்கள் அரசுக்கு சொந்தமா? அல்லது குறிப்பிட்ட வம்சத்திற்கு சொந்தமா என பட்டிமன்றம் நடந்து வரும் நிலையில், ஆறாவது அறையில் எவ்வளவு கொட்டிக் கிடக்கிறதோ என உலகமே எதிர்நோக்கியுள்ள நிலையில், அந்த அறையை திறப்பதை தடுக்கும் நோக்கில்தான் மேற்கண்ட வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாக மக்கள் கருதுகிறார்கள். சின்ன பிள்ளைகள் எதாவது சேட்டை பண்ணினால் 'சாமி கண்ணை குத்தீரும்' என்று மாற்று மதத்தவர்கள் சொல்வதை பார்த்திருக்கிறோம். அதைபோல் அந்த அறையை திறக்காதீர்கள்; தெய்வ குற்றமாகிவிடும் என்று பயம் காட்டப்படுகிறது. அப்படி தெய்வத்திற்கு[?] கோபம் வருமென்றால் ஏற்கனவே ஐந்து அறைகள் திறக்கப்பட்டபோது வரவில்லையே ஏன்? இதிலிருந்தே தெரியவில்லையா இது மூட நம்பிக்கை என்று?
பத்மநாப சுவாமி கடவுளென்றால் அந்த கடவுளுக்கு நாள்தோறும் பூஜை புனஸ்காரங்கள் குறைவின்றி நிறைவாக நடந்து வரும் நிலையில், உபயோகமின்றி கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ஆபரணங்களை சேமிக்க ஆசைப்படுவது ஏன்? அவைகளை ஏழைகளுக்கு வழங்குவதுதானே நியாயமாக இருக்கும்? மேலும், அந்த கால அரசர்கள் அன்னியர்கள் படையெடுப்பால் தங்கள் நாட்டு செல்வங்கள் சூறையாடப்பட்டு விடக் கூடாது என்பதற்காக பதுக்குவதற்கு பாதுகாப்பான இடமான கோயில்களில் பதுக்கி இருக்கலாம். இந்த பத்மநாபா சுவாமி கோயில் ஆபரணங்களும் அந்த வகையை சார்ந்ததா என்பதை மத்திய அரசு திறந்த மனதுடன் ஆய்வு செய்து அரசு கஜானாவில் சேர்க்க முயற்சிக்க வேண்டும். அவைகளை ஏழைகள் மேம்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டும் என்பதே பக்திக்கு அப்பாற்பட்ட நடுநிலை மக்களின் மன நிலையாக உள்ளது என்பதை அரசு புரிந்து கொள்ளுமா?
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
உங்கள் விமர்சனகள், இறைவனுக்கு உண்மையாய் இருக்கு வேண்டுகிறோம்