Related Posts Plugin for WordPress, Blogger...

Tamil Nadu Thowheed Jamaath - Seven Wells Branch Headline Animator

அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைத்து தானும் நல்ல அமல் செய்து தான் ஒரு முஸ்லிம் என்று கூறுபவனை விட அழகிய சொல்லுக்குரியவன் யார் ?

தேர்வுகள் முடிந்துவிட்டது - விடுமுறையை பயனுள்ளதாக மாற்றுவோம்

Posted on
  • ஞாயிறு, 17 ஏப்ரல், 2011
  • by
  • Unknown
  • in
  • தேர்வுகள் முடிந்துவிட்டது -  விடுமுறையை பயனுள்ளதாக மாற்றுவோம்

      10 -ஆம் வகுப்பு மற்றும் 12 - ஆம் வகுப்பு தேர்வுகள் முடிந்துவிட்டது.  மாணவர்களும், பெற்றோர்களும் நிம்மதி பெருமூச்சுடன் தேர்வுக் முடிவுகளை எதிர்பாத்த வண்ணம் இருக்கின்றனர். இடையில் 6 முதல் 10 வாரம் வரை மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாள்களை எதிர்காலத்தில் தமது கல்வி அறிவு சிறக்க பயன்படும் வகையில் மாணவர்கள் பயன்படுத்த வேண்டும்.

    விடுமுறை நாள்களின் என்ன பண்ணலாம்?

    1. ஆங்கில மொழிதிறனை (English language skill) வளர்த்துகொள்ள முயற்சிக்கவும் : ஆங்கில மொழிதிறன் என்பது இன்று இன்றியமையாத ஒன்றாக உள்ளது. தமிழ் வழி கல்வி பயின்ற மாணவர்கள் ஆங்கில பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து படிக்கலாம் அல்லது வீட்டில் இருந்தே ஆங்கில மொழி பயிற்சி புத்தகங்களை படிக்கலாம். ஆங்கில திறனை வளர்த்து கொள்ள மிக சிறந்த வழி ஆங்கில குர்ஆனை தமிழ் குர்ஆனுடன் ஒப்பிட்டு வாசிப்பது. குர்ஆனை, வசனத்திற்க்கு வசனம் ஆங்கிலத்திலும் தமிழிலும் படிப்பதின் மூலம் ஆங்கில அறிவும் வளரும், அல்லாஹ்வுடைய கட்டளைகளையும் அறிந்து கொள்ளமுடியும்.

    2. தொடர்பு திறனை (Communication skill) வளர்ப்பது : வேலைவாய்ப்பு பெற மிக முக்கிய தகுதியாக கருதபடுவது தொடர்பு திறன் எனப்படும் Communication skill. என்னதான் மதிப்பெண் வாங்கி இருந்தாலும் Communication skill இல்லாவிட்டால் எந்த நிறுவனத்திலும் வேலைக்கு எடுக்க மாட்டார்கள். இந்த தொடர்பு திறன்  Communication skill -யை வளர்த்து கொள்ள மிக முக்கிய தேவை தைரியம், தைரியமாக நீங்கள் நினைக்கும் கருத்துக்களை பிறருக்கு சொல்ல பழகுங்கள். அதாவது இஸ்லாமிய ரீதியில் சொல்வதாக இருந்தால் நல்ல தாயிகளாக ( பிரசாரகர்களாக) மாற பழகுங்கள். Communication skill  என்பது  ஒவ்வொறு முஸ்லீமிடமும் கட்டாயம் இருக்கவேண்டிய பண்பாகும். 
    "நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்." (குர்ஆன் 3 : 104)

    தினமும் குர் ஆனை எடுத்து தொழுகைக்கு பிறகு வீட்டில் உள்ளவர்காளுக்கு படித்துகாட்டுங்கள், முடிந்தவரை பிறருக்கு எடுத்து சொல்லுங்கள், அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல பழகுங்கள்.  குர் ஆனுடைய கருத்துகளை பிறருக்கு சொல்வதற்க்கு வெட்க படாதீர்கள், தைரியமாக சொல்லுங்கள். இப்படி தொடர்சியாக செய்வதன் மூலம் நம்முடைய Communication skill - யை வளர்த்து கொள்ள முடியும்.

    கணினி அறிவை (Computer knowledge ) வளர்த்து கொள்ளுங்கள் : தற்போது பள்ளிபடிப்பு படிக்கவே கணினி அறிவு  (Computer knowledge)அவசியமாகின்றது, எனவே கணினியில் குறிப்பாக MS Office (Word, Excel, Power Point etc..)கற்றுகொள்ளுங்கள். மேலும்  internet-ன் பயன்பாட்டையும் கற்றுகொள்ளுங்கள், குறிப்பாக  மின் அஞ்சல் (E -mail) துவங்குவது, google Search, விக்கீபீடியா போன்றவைகளை அறிந்துகொள்ளுங்கள், இன்டெர்னெட் பயன்படுத்தும் போது பெற்றோர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும், இணையதளத்தில் நல்ல வியஷயங்களுக்கு இணையாக கெட்ட விஷயங்களும் கொட்டிகிடக்கின்றது. தற்போதுள்ள காலத்தில் இன்டெர்னெட்டே வேண்டாம் என ஒரேடியாக ஒதுக்கிவிட முடியாது, எனவே பெற்றொர்கள்தான் மாணவர்களை இன்டெர்னெட்டை சரியான முறையில் பயன்படுத்த பழக்க படுத்த வேண்டும்

    10 மற்றும் +2 - ஆம் வகுப்பு படிக்க போகும் மாணவர்களுக்கு : விடுமுறையை வீணாகாமல் இப்போதே பொது தேர்விற்க்கு படிக்க ஆரம்பித்து விடுங்கள்.  9 - ஆம் வகுப்பு முடித்து 10 - ஆம் வகுப்பு செல்லும் மாணவர்கள் 10 - ஆம் வகுப்பு பொது தேர்விற்க்கும். +1 முடித்து +2 செல்லும் மாணவர்கள் +2  வகுப்பு பொது தேர்விற்க்கு தயாராகுங்கள்.  +2 ஆம் வகுப்பு படிக்க போகும் மாணவர்கள்  தேசிய அளவில் மருத்துவம் பொறியியல் படிக்க நடத்தப்படும் போட்டி தேர்வுகளுக்கு  தயாராகுங்கள்.

     +2 - ஆம் வகுப்பு படிக்க போகும் மாணவர்களுக்கான போட்டி தேர்வுகள் :

    IIT-JEE - இந்த தேர்வு IIT, IISc - ல் B.E/B.Tech/B.Arch படிக்க நடத்தபடும் தேர்வாகும், +2 - ல் கணிதம், இயற்பியல், வேதியியல் படிக்கும் மாணவர்கள் எழுதலாம்.
    AIEEE - NIT  மற்றும் மத்திய பல்கலை கழகங்களில் B.E/B.Tech/B.Arch படிக்க நடத்தபடும் தேர்வாகும், +2 - ல் கணிதம், இயற்பியல், வேதியியல் படிக்கும் மாணவர்கள் எழுதலாம்.
    AIPMT -  மத்திய அரசின் மருத்துவ கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் MBBS படிக்க நடத்தபடும் தேர்வு, உயிரியல் அல்லது விலங்கியல், தாவரவியல் மற்றும் இயற்பியல் , வேதியியல் படிக்கும் மாணவர்கள் எழுதலாம்.
    HSEE - IIT -யில் ஒருங்கினைத்த 5 ஆண்டு M.A. படிப்பிற்க்கான தேர்வு. அனைத்து பிரிவு மாணவர்களும் எழுதலாம், குறிப்பாக Arts குரூப் படிக்கும் மாணவர்கள் இந்த தேர்வின் மூலம் IIT-யில் படிக்கலாம்

    மாணவர்களே!  நேரத்தை வீணாகாமல் இப்போதே போட்டி தேர்வுகளுக்கும் , பொது தேர்வுகளுக்கும் தயாராகுங்கள்.  தேர்வுகள் கடினம் என்ற தவறான சிந்தனையை குப்பையில் போடுங்கள், எந்த தேர்வையும் சந்தித்து சாதிக்க நம்மோடு அல்லாஹ் இருகின்றான், அல்லாஹ்விம் மீது நம்பிக்கைவையுங்கள் அவனிடம் வலியுத்தி கேளுங்கள், கடினமாக உழைத்து படியுங்கள் நிச்சயம் அல்லாஹ் நமக்கு வெற்றியை தருவான் இன்ஷா அல்லாஹ்.

    அனைத்து போட்டி தேர்வுகள் பற்றி மேலும் அறிந்து கொள்ள sithiqu.mtech@gmail.com என்ற ஈ - மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

    நன்றி 
    S.சித்தீக்.M.Tech

    0 கருத்துகள்:

    கருத்துரையிடுக

    உங்கள் விமர்சனகள், இறைவனுக்கு உண்மையாய் இருக்கு வேண்டுகிறோம்

    Related Posts Plugin for WordPress, Blogger...
     
    Copyright (c) 2011 Designed byDezMatix
    Other Links : TNTJ NEWS PORTAL, Online PJ,