அன்பார்ந்த சகோதர சகோதரிகளே,
நமது கல்வி களஞ்சியம் சேவை தொடங்கப்பட்டு குறுகிய காலத்தில் (3 மாதம்) 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்கங்கள் பார்வையிடப்பட்டுள்ளது.
இணையதளங்கள் பற்றிய தகவல்களை தரும் முன்னணி தளமான Alexa.com என்ற இணையதளத்தின் தற்போதைய பதிவின் படி,
* உலக ரேங்கிங் – 410,261
* இந்தியாவில் ரேங்கிங் - 25,357
* இதுவரை 41 இணையதளங்கள் நமது கல்வி களஞ்சியத்தின் தகவல்களை விரும்பி, அதனை அவர்களது இணையதளங்களில் பயனுள்ள தளங்கள் பகுதியில் சேர்த்துள்ளனர்.
* சராசரியாக ஒருவர் நமது இணையதளத்தை 12 நிமிடங்கள் பார்வையிடுகிறார்.
* சராசரியாக ஒருவரால் 6.9 பக்கங்கள் பார்வையிடப்படுகிறது.
மேலும் இதுவரை 5000 பேருக்கும் மேலாக facebook, Twitter, Google Plus போன்ற Social Networking இணையதளங்களில் எங்களுடன் இணைந்துள்ளனர்..!!
LIVE CHAT மூலம் கல்வி வழிகாட்டி – இன்று முதல்…..
தற்போது தொலைபேசி மற்றும் ஈமெயில் வழியாக கல்வி சம்பந்தமான கேள்வி பதில் மற்றும் சந்தேகங்களை தீர்த்து வரும் கல்வி களஞ்சியம், வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க இன்று முதல் LIVE CHAT மூலம் நேரடியாக கல்வி தொடர்பான சந்தேகங்களை கேட்டு தெளிவு பெறும் வசதியை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறது.
கல்வி, அறிவியல் தொடர்பான வீடியோ தொகுப்பு
தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் என்ன படிப்பது, எங்கு படிப்பது, அடுத்த இலக்கு, ஆலோசனை நேரம் , போன்ற கல்வி நிகழ்ச்சிகள் மற்றும் விலங்குகளின் வாழ்க்கை முறை, விஞ்ஞானம் தொடர்பான அறிவியல் தகவல்களை உங்களுக்கு நல்ல தரத்தில் அமைந்த வீடியோக்கள் மூலம் வழங்கி வருகிறோம்!!
கல்வி களஞ்சியத்தின் அடுத்த திட்டமான "நம் கல்வி நம் எதிர்காலம்" மூலம் உங்கள் விவரங்களை கல்வி களஞ்சியத்தில் பதிவு செய்து (Register) உங்கள் கல்வி சம்பந்தமான தகவல்களை வெளியிட்டு அனைவருக்கும் பயன் தரும் வகையில் அதை பரப்பும் வசதியும் விரைவில் தொடங்க உள்ளது.
மேலும் இது போன்ற பல திட்டங்களை செயல்படுத்த உங்கள் கருத்துகளையும், ஆலோசனைகளையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
கல்வி களஞ்சியத்தின் அன்பான வேண்டுகோள்:
தற்போது கல்வி களஞ்சியம் இணையதளம் "Shared Hosting" எனப்படும் பல இணையதளங்கள் பங்கிட்டுக்கொள்ளும் முறையில் ஹோஸ்ட் செய்யப்பட்டுள்ளது. இதனால் சர்வர் (Server) வேகம் குறைவாக உள்ளதோடு ஒரே நேரத்தில் பலர் இணையதளத்தை பார்க்கும் நேரங்களில் யாருக்கும் இணையதளம் Open ஆவதில்லை.
நம்மிடம் பல சகோதரர்கள் இணையதளத்தின் வேகம் குறைவாக உள்ளது மற்றும் அவ்வப்போது Open ஆவதில்லை என புகார் தெரிவித்துள்ளனர். இந்த பிரச்சனையை தீர்க்கும் வகையில் Dedicated Server என்று சொல்லப்படும் தனியாகவே சர்வர் ஐ வாங்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.
இந்த Dedicated Server இன் விலை மிக அதிகம் (மாதத்திற்கு 10,928 ரூபாய், வருடத்திற்கு 1,18,000) என்பதால் வாசகர்களிடம் இருந்து வரும் விளம்பரங்கள் மூலமே இதை நடைமுறை படுத்த முடியும்.
இந்த சூழ்நிலையில் கல்வி சேவை தடையின்றி தொடரவும், இந்த இணையதளம் சிறந்து விளங்கவும் உங்கள் விளம்பரங்களை எங்களுக்கு வழங்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
இந்த குறிகிய கால வெற்றிக்கு நன்றி தெரிவிப்பதோடு, கல்வி சேவையில் இன்னும் பல வெற்றியை அடைய உங்கள் ஒத்துழைப்பை என்றும் எதிர்பார்க்கிறது கல்வி களஞ்சியம்.